|
பனைசெறி
இந்நி லத்துப்
படுமுப்பு விளைப்போ
ரென்றும்
வினைதவா துஞற்ற மிக்க
வெயி்ல்வளம்
வேண்டி நிற்பார்.
(சொ - ள்.) தினை முதல் வரகு முன் செஞ்சாலி முன் விளைக்கும்
வனைபுகழ்
மூன்று நிலத்தார் - தினை முதலியவற்றையும், வரகு முதலியவற்றையும், செந்நெல்
முதலியவற்றையும் உண்டாக்குகிற அலங்கரித்த புகழையுடைய மூன்று நில
மக்களும,் நன்கு மழைவளம் வேண்டி நிற்பார் - (தங்கள் தொழில் சிறப்பதற்காக)
மழையின் பெருக்கத்தை விரும்பி நிற்பார், பனைசெறிஇ நிலத்து படும் உப்பு விளைப்போர்
- பனைகள் நெருங்கியுள்ள இந்த நெய்தல் நிலத்தில் உண்டாகும் உப்பை
விளைக்கிறவர்கள், என்றும் வினைதவாது உஞற்ற மிக்க வெயில் வளம் வேண்டி
நிற்பார் - எக் காலத்தும் தொழில் தவறாது செய்யும் பொருட்டு மிகுந்த வெயிலின்
பெருக்கை விரும்பி நிற்பார்கள்.
(வி - ம்.) தினை முதலிய விளை நிலம் குறிஞ்சி. வரகு முதலிய
விளை நிலம்
முல்லை. நெல் முதலிய விளை நிலம் மருதம். இம் மூன்று நிலத்து வாழ் மக்களுக்கும்
மழைவளம் வேண்டும். பயிர் வளர்ந்து தானியம் விளைவதற்கு. நெய்தல் நிலமாக்களுக்கு
உப்பு விளைவதற்கும், மீன் பிடிப்பதற்கும் எப்போதும வெயிலே வேண்டும் என்பது.
(215)
இவ்வகை வளங்க ளெல்லாம்
இனிதுகண் விட்டு
நோக்கிச்
செவ்விய இறும்பூ தெய்திச்
சீரகந் துளிப்பத்
தன்மெய்
ஒவ்வமெல் வளிதண் ணென்ன
வருடவோர் புன்னை
நீழல்
ஒளவியம் அவித்த மேலோன்
சற்றிருந் தயர்வு
யிர்த்தான்.
(சொ - ள்.) இ வகை வளங்கள் எல்லாம் இனிது கண் விட்டு நோக்கி
செவ்விய
இறும்பூது எய்தி - இவ்வகையான வளங்களை எல்லாம் இனிமையாகக் கண்ணைத்
திறந்து பார்த்து மிக்க வியப்படைந்து, சீரகம் துளிப்ப தன் ஒவ்வ மெல்வளி தண்
என்ன மெய்வருட - கடல் நீர் திவலை தெறிக்கவும் தன் உடம்பிற் பொருந்தும்படி
மெல்லிய காற்றுத் தடவவும், ஒளவியம் அவித்த மேலோன் - பொறாமைக் குணத்தைக்
கெடுத்த மேலோன் ஆகிய
|