பக்கம் எண் :

180 குசேலோபாக்கியானம்

     என்செய்வாம் நன்சொற் கூறி
          இரப்பதே துணிவென் றெண்ணிப்
     பொன்செய்த மலர்ப்பூம் புன்னை
          நிழலினின் றெழுந்து போந்து
     வன்செயல் மீகான் சார்ந்து
          மனமிரங் குரைபல் கூறி
     நன்செய லேறி நின்றான்
          நடைக்கலம் ஏறி னானே.

   (சொ - ள்.) என் செய்வாம்-என் செய்வோம், நன்சொற் கூறியிரப்பதே துணிவு
என்று எண்ணி - நல்ல மொழிகளைச் சொல்லி வேண்டிக்கொள்வதே செய்யத்தக்கது
என்று நினைத்து, பொன் செய்த மலர்பூம் புன்னை நிழலில் நின்று எழுந்து போந்து -
அழகு காட்டுகின்ற மலர் பூத்த விளக்கமான புன்னைமர நிழலிலிருந்து எழுந்து புறப்பட்டு,
வன்செயல் மீகான் சார்ந்து மனம் இரங்கு உரைபல் கூறி - வலிய தொழிலைச் செய்யும்
கப்பலோட்டியை அடு்த்து அவன் மனம் இரங்கும்படியான சொற்களைச் சொல்லி
நன்செயல் ஏறி நின்றான் நடைக்கலம் ஏறினானே - நல்லொழுக் கத்தில் மேம்பட்டவனான
குசேலன் விரைந்து செல்லும் கப்பல் மீது ஏறினான். ஏ : அசை.

   (வி - ம்.) நின்றான் என்பது வினையாலணையும் பெயர். நன் செயல் -
நல்லொழுக்கம். ஏறி - உயர்ந்து. நல்லொழுக்கத்தால் உயர்ந்து நின்றவன் என்பது
குசேலனைக் குறித்தது நடைக்கலம் - நடத்தலையுடைய கப்பல். நடை - நடத்தல்
கப்பலை நடத்துதல் வலிய செயல் ஆதலால் "வன்செயல் மீகான்" என்றார்.
                                                    (218)

     கூம்புடைக் கலமீ கானாற்
          குரைகடல் கிழிய வோடித்
     தேம்பலில் துவார கைக்குச்
          செல்துறை இறுத்த லோடும்
     பாம்பணைக் கடவுள பாத
          பங்கயம் உள்ளத் துள்வோன்
     ஓம்பலுற் றிறங்கு வாரோ
          டிறங்கினான் உவகை யெய்தி.

   (சொ - ள்.) கூம்பு உடைகலம் மீகானால் குரைகடல் கிழிய ஒடி -
பாய்மரத்தையுடைய மரக்கலமானது மீகாமனால் ஒலிக்கின்ற கடல்நீர் பிளக்கும்படி ஒடி,
தேம்பல்இல் துவார