|
கைக்குச் செல்துறை இறுத்தலோடும்-வாட்டம்
இல்லாத துவாரகை நகர்க்குச் செல்கின்ற
நீர்த்துறையில் சென்று தங்குதலும், பாம்பு அணை கடவுள் பாத பங்கயம் உள்ளத்து
உள்வோன் - பாம்பாகிய பள்ளியில் தங்கியிருக்கும் கடவுளாகிய திருமாலின் அடிகளாகிய
தாமரை மலர்களை மனதில் நினைக்கின்றவனாகிய குசேலன், ஒம்பல் உற்று
இறங்குவாரோடு இறங்கினான் உவகை எய்தி - காவலாக இறங்கியவர்களுடன் மன
மகிழ்ந்து இறங்கினான்.
(வி - ம்.) குரைகடல் ஒலிக்குங் கடல்: வினைத்தொகை - செல்
+ துறை-உவகை
எய்தி இறங்கினான் எனக் கூட்டுக (219)
கலி
விருத்தம்
பான லந்துவ ரைப்பன்மி னார்கண்வா
யான லந்துவ ரைப்பற்று றாதவன்
வான லந்துவ ரைப்படும் போன்பின்வாழ்
கான லந்துவ ரைப்பதி கண்ணுற்றான்.
(சொ - ள்.) பானலம் துவரைபன் - நீல மலரையும், அழகிய பவளத்தையும்
உவமையாகச்) சொல்லுகின்ற. மினார்கண் வாயால் - பெண்களுடைய கண்களாலும்
வாயாலும்; அலந்து உவரை பற்று உறாதவன் - (காதல்கொண்டு) வருந்தி அவர்மேல்
விருப்பங் கொள்ளாதவன் (ஆகிய குசேலன்), வான் நலந்து உவரைப்படுப்போன் -
தேவர்கள் நலத்துக்காகக் கடலிற் படுத்துறங்குவோன் (ஆகிய கண்ணன்) பின்வாழ் -
பிற்காலத்து வாழ்ந்த, கானல் அம்துவரைப் பதி கண்ணுற்றான் - கழிக்கரைச்
சோலைகளையுடைய துவாரகை என்னும் நகரத்தைப் பார்த்தான்.
(வி - ம்.) பானலம்-பானல் + அம் சாரியை: பானலம் - குவளை.
நீலோற்பலம்.
துவர் - பவளம். துவர் + ஐ; சாரியை என்றாவது இரண்டனுருபு என்றாவது கொள்க.
உவர் என்பது இவர் அவர் என்பது போன்ற சுட்டுப் பெயர். இது பெண்களைச்
சுட்டிற்று. உவர் - கடல். இது திருப்பாற்கடலை யுணர்த்தியது. முன் வடமதுரையில்
கண்ணன் முதலில் இருந்தனன் என்றும் பின்னர் துவாரகைக்கு வந்தனன் என்பதும்
வரலாறு; அதனால், "பின் வாழ்" என்றார். (220)
தருமந் தன்னகந் தங்கிப் பொலிவுறத்
தெருமந் தன்னகு பாவஞ் சிதைதர
அருமந் தன்னவன் வைகலின் ஆரஞர்க்
கருமந் தன்னமும் இன்றக் கடிநகர்.
|