|
(சொ - ள்.) தருமம்
தன் அகம் தங்கி பொலிவுற - அறமானது தன்
இடத்தில்பொருந்தி விளங்கவும், அல் நகுபாவம் தெருமந்து சிதைதர - கரிய இருளையும்
புறம்கொடுக்க செய்யும் பாவமானது கலங்கி அழியவும், அருமந்து அன்னவன் வைகலின்
- அருமையாகிய அமிர்தத்தை ஒத்த இனிய பண்புடைய கண்ணபிரான் தங்கி யிருத்தலால்,
ஆர் அஞர் கருமம் அ கடி நகர் தன்னமும் இன்று - அரிய துன்பம் தரும் செயல்
அந்தக் காவல்மிக்க நகரில் சிறிதும் இல்லை.
(வி - ம்.) அந்நகரில் கண்ணன் இருந்து அரசுபுரிதலால் தருமம்
தங்கி விளங்கிற்று.
பாவச் செயல் சிறிதுமின்றி வளம் பொருந்தியிருந்தது அந்நகர் என்பது கருத்து. தெருமந்து
- மயங்கி, கலங்கி. சிதைதர - அழிய. மருந்து என்பது இடை குறைந்து மந்து என
நின்றது. மருந்து - அமிழ்தம். தன்னம் - சிறிது, அற்பம். (221)
கொடிய விஞ்சிவட் காரைக் குனித்தடுங்
கொடிய விஞ்சிவட் காரைக் குனித்தடுங்
கடிய கற்சிக் கிடங்கராக் காலுறுங்
கடிய கற்சிக் கிடங்கராக் காலுறும்.
(சொ - ள்.) கொடிய விஞ்சி - கொடுமையுடையன (பல பொறிகள்)
மிஞ்சி,
வட்காரைக் குனிந்து அடும் - பகைவரை வளைத்துக் கொல்கின்ற, கொடிய இஞ்சி -
துகிற்கொடியையுடைய கோட்டை மதில், வண்காரைக் குனித்து அடும் - வளமான
மேகத்தை அசைத்து மேற்கொள்ளும், கடி அகற்சிக் கிடங்கு - மணம் பொருந்திய
அகன்ற இடமுள்ள அகழிகளில் அரா காலுறும் கடிய கல்சிக்கு - பாம்புகள் உமிழ்ந்த
விளக்கமான மணியாகிய (நாகரத்தினம் என்ற) கற்களிற் சிக்கிய, இடங்கர் ஆகால
உறும் - முதலைகள் அவ்விடத்திலேயே பொருந்தியிருக்கும்.
(வி - ம்.) முதலடியில் கொடிய என்பது கொடுமையாகிய பொறிகள்;
குறிப்பு
வினையாலணையும் பெயர். இரண்டாவது அடியில் கொடிய - கொடியுடைய ; குறிப்பு
வினைப் பெயரெச்சம். பகைவர் வரின் அவரைக் கொல்லுதற்காக மதிலிற் பல பொறிகள்
அமைத்திருப்பது இயல்பு. அதனால், "கொடிய விஞ்சி" என்றார். விஞ்சி - மிகுந்து,
அகழி பாதாலம்வரை ஆழ்ந்திருந்தது என்பது. "அராக் காலுறும் கடியகல்" என்ற
குறி்ப்பினால் மணி தோன்றியது. நாகமணி பல கிடந்து ஒளி வீசுதலால் அவற்றிடையே
சிக்கிய முதலைகள் மிக்க வொளியாற் கண்கூசி அவ்விடத்தைவிட்டு
|