பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்183


அகலாமற் கிடக்கும் என்பது கருத்து. அ என்ற சுட்டு ஆ என நீண்டது கால் - இடம்.
                                                            (222)

     குவலை யங்கம லங்குல வாம்பல்மல்
     குவலை யங்கம லங்குகு திக்குமுன்
     குவலை யங்கம லங்குறத் தோற்றிநன்
     குவலை யங்கம லங்குயிற் றந்நகர்

   (சொ - ள்.) குவலையம் கமலம் குலம் ஆம்பல் மல்கு - நீலமும், தாமரையும் ,
மேன்மையான அல்லியும் ஆகிய இவைகள் நிறைந்து, அலை அங்கு அம்மலங்கு
குதிக்குமுன் - அலைகளையுடைய நீராகிய அவ்விடத்து மலங்கு மீன்கள் குதிப்பதற்கு
முன், குவலையம் கம் அலங்குறத் தோற்றி - பூமி, விண்ணுலகம் விளங்கும்படி காட்டி
(அதனால்), அந்நகர் நன்கு வலையம் கமலம்குயிற்று - அந்நகரமானது நன்றாக வட்டமாகிய
நீரிற் பதித்தது போலிருக்கும்.

   (வி - ம்.) மலங்கு குதிக்குமுன் எனவே அவை குதித்த போது நீரசைவதால்
சாயை தோன்றாது எனக் கொள்க. மலங்கு மீன்கள் குதியாமல் நீர் அசைவற்று நின்று
தெளிவாயிருப்பதால் விண்ணுலகச் சாயையும், அந்நகரின் சாயையும் தோன்றும் எனவும்
அச்சாயை தோன்றுவது மண்ணுலகத்தையும் வி்ண்ணுலகத்தையும் வட்டமான நீர்க்குட்
பதித்து வைத்தது போலத் தோன்றும் எனவும் கொள்க காலை மாலை அந்நகர்ச்
சாயைமட்டும் தோன்றுவதால் மண்ணுலகம் பதித்த காட்சி தோன்றும்; நண்பகலில்
விண்ணுலகம் பதித்த காட்சி தோன்றும் என்பதும் குறிப்பாகத் தோன்றியது. மல்கு+அலை
=மல்குவலை என விரிந்து நின்றது ; விரித்தல் விகாரம். மலங்கு - ஓருவகை மீன்.
இதனை விலாங்கு என இக்காலத்தார் கூறுவர்.                      (223)

     இன்ன மாநகர் காண்டலும் ஏர்முகில்
     அன்ன மேனியற் காண்ட லொப் பாமகிழ்ந்
     தின்னல் தீர்தர வெட்டி விசைகொளீஇ
     நன்னர் நெஞ்சன் நடக்கத் தொடங்கினான்.

   (சொ - ள்.) இன்ன மாநகர் காண்டலும் ஏர்முகில் அன்ன மேனியன் காண்டல்
ஒப்பா மகி்ழ்ந்து - இத்தகைய பெருமை பொருந்திய நகர்த்தைப் பார்த்ததும் அழகிய
மேகம் போன்ற நிறத்தையுடைய கண்ணபிரானைக் கண்டதைப்போல மகிழ்ந்து, இன்னல்
தீர்தர எட்டி விசை கொளீ இ-துன்பம் ஒழியும்படி எட்டியடிவைத்து வேகங்கொண்டு,
நன்னர் நெஞ்சன் நடக்கத் தொடங்கினான்-நல்ல உள்ளதையுடைய குசேலன் நடக்க
முற்பட்டான்.