பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்185


தந்தது. உன்னிப் பார்க்கும் என்பது பொருள். குறிப்பால் தரையைப் பார்ப்பான் என
அறிக.
                                                           (226)

     சீத நீழற் செலிற்சிற் றுயிர்தொகை
     போதச் சாம்பும்மென் றெண்ணிய புந்தியான்
     ஆத வந்தவழ் ஆறு நடந்திடுங்
     காத லங்கை விரித்துக் கவித்தரோ.

   (சொ - ள் ) சீதநிழல் செலின் சிறு உயிர் தொகைபோதசாம்பும் என்று எண்ணிய
புந்தியான்-குளிர்ச்சி பொருந்திய (மரங்களின்) நிழலில் சென்றால் சிறிய உயிர்க் கூட்டங்கள்
அழிந்து போகுமென்று நினைத்த அறிவுள்ளவனாகிய குசேலன் ; ஆதவம் தவழ் ஆறு
நடந்திடும் காதல் - சூரியன் வெயில் பரவும் வழியே போகும் விருப்பினால், அம் கை
விரித்துக்க வித்தார் - உள்ளங்கையைத் திருப்பித் தலைமேல் வைத்துக்கொண்டான்.

   (வி - ம்.) சிறுமை + உயிர்-சிற்றுயிர். எறும்பு கறையான் முதலியவை. சாம்பு -
வருந்தும். "உற்றநோய் நோன்ற லுயிர்க் குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு"
என்ற வள்ளுவர் கருத்தினை யுட்கொண்டது இது.                  (227)

          எழுசீரடி யாசிரிய விருத்தம்
     நாகுவண் டொலிப்பப் படுங்கடச் செருக்கால்
          நாடொறும் இன்பிடி யூட்டும்
     பாகுடல் குமைக்குங் கறையடிக் களிறு
          பாவிய கூடமுங் கடுங்கால்
     ஏகுவாம் பரிமந் திரங்களும் வாட்போர்
          இலகுகல் லூரியும் விண்ணில்
     போகுயர் இரத நிலைகளும் மிகுத்த
          புடைவளப் பெருநகர் கடந்தான்.

   (சொ-ள்.) நாகு வண்டு ஒலிப்பப்படும் கடம் செருக்கால் நாள் தொறும் இன் பிடி
ஊட்டும் பாகு உடல் குமைக்கும் கறை அடி களிறு பாவிய கூடமும் - இளமையாகிய
வண்டுக்ள இரையும்படி உண்டாகின்ற மதநீர்க்களிப்பால் இனிய கைப்பிடியளவாகிய
கவளம் ஊட்டுகின்ற பாகனது உடலையழிக்கின்ற உரல்போன்ற அடிகளையுடைய ஆண்
யானைகள், பரந்து நிற்கின்ற யானைப் பந்தியும், கடும்கால் ஏகு வாம் பரிமந்திரங்களும்
- விரைந்தெறியும் காற்றுப்போற் செல்லுகின்ற பாய்ந்தோடும் குதிரைகள் நிற்கும் பந்திகளும்,
வாள்போர் இலகு கல்லூரியும் - வாட்போர்ப் பயிற்சி புரியும் நிலையங்களும், விண்ணில்
போகு உயர் இரதம் நிலைகளும்