|
மிகுத்த புடைவளம் பெருநகர் கடந்தான்
- விண்ணளவும் நீண்டு உயர்ந்த தேர் நிற்கும்
இடங்களும் மிகுந்த பக்கம் சூழ்ந்த வளங் கொண்ட பெரிய நகரத்தைக் கடந்து சென்றான்.
(வி - ம்.) இன்பிடி என்பது இனிய கவளம் எனப் பொருள் தந்தது.
பிடி என்பது
இருகையாலும் பிடித்துத் திரட்டும் உருண்டையையுணர்த்தியது ஆகுபெயர். பாகனைக்
கொல்வது மத யானையின் இயற்கை. ஆதலால் "பாகுடல் குமைக்கும்" என்றார்.
"யானையறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்" என்பது நாலடி யார், கால் ஏகு உவமைத்
தொகை. கால் போல ஏகு என விரிக்க. கால் - காற்று, போகு - நீண்ட. யானைக்கூடம்,
குதிரைப்பந்தி, வாட் கல்லூரி, தேர்க்கூடம் இவை மிகுந்த நகர் என்க.
(228)
கூந்தலம் பிடியுங் கோணைமாக் களிறும்
கூடியாட் டயர்ந்தென
மணிப்பூண்
ஏந்தெழில் இளமங் கையருமைந் தரும்பொன்
இயைதரு சிவிறியும்
பந்துஞ்
சேந்தகைத் தலங்கொண் டொள்ளறல் இறைத்துச்
செறிகளி இன்புவந்
தாடும்
பூந்தடம் மலிந்து பலவளம் நிறைந்து
பொலி தரும்
இடைநகர் கடந்தான்.
(சொ - ள்.) கூந்தல் அம் பிடியும் கோணை மாகளிறும் கூடி ஆட்டு
அயர்ந்தால்
என - கூந்தலையுடைய அழகிய பெண் யானைகளும் கொடிய பெரிய ஆண்
யானைகளும் சேர்ந்து விளையாடியது போல, மணிபூண் ஏந்து எழில்இள மங்கையரும்
மைந்தரும் - பலவகை மணிகள் பதித்த அணிகலன்கள் பூண்டுள்ள இளைய பெண்களும்,
இளைஞரும், பொன் இழைதரு சிவிறியும் பந்தும் சேந்த கைத்தலம் கொண்டு - அழக
பொருந்திய விசிறியையும், பந்தையும் சிவந்த கையிடம் கொண்டு, ஒள் அறல் இறைத்து
செறிகளி இன்பு உவந்து ஆடும் - ஒள்ளிய நீரை வாரி வீசி மிகுந்த மகிழ்ச்சியுடனும்
இன்பத்துடனும் மகிழ்ந்து நீராடுகின்ற, பூதடம் மலிந்து பலவளம் நிறைந்து பொலிதரும்
இடைநகர் கடந்தான் - மலர்க்குளங்கள் மிகுந்துள்ளதும், பலவளங்கள் நிறைந்துள்ளது
மாகிய விளங்குகின்ற இடைநகரைக் கடந்து சென்றான்.
(வி - ம்.) கூந்தல்-யானைக் கழுத்துமயி்ர். கோணை-வலிமை, கொடுமை.
சிவிறி
- நீர்த்துருத்தி. பந்து-மட்டத்துருத்தி. நீரைப் பிறர்மேல் வேகமாகப் பொழிவதற்குரிய
கருவி துருத்தி என்பது. அதில் மட்டத்துருத்தி என்பதும் ஒன்றாம்.
(229)
|