பக்கம் எண் :

188 குசேலோபாக்கியானம்

     முடங்குளை மடங்கல் அடங்கரும் உழுவை
          முதற்கொடும் பொறிபல உடைத்தாய்த்
     தடங்கொளீஇ நின்ற மதிற்பெரு வாயில்
          தடையையுந் தடையறக் கடந்தான்.

   (சொ - ள்.) படம் கிளர் அரவம் பாய்உடை பகவன்பார் அளந்திட்ட நாள்
வளர்ந்து ஆங்கு - படம் விளங்குகின்ற பாம்பாகிய படுக்கையைக் கொண்ட திருமாலாகிய
தேவன் பூமியை அளந்துபார்கக் முற்பட்டபொழுது, கால் ஓங்கி நீண்டது போல், இடம்
கொள் விண் உலகம் போழ்ந்து மேல் வளரா - இ்டமகன்ற விண் உலகத்தைப் பிளந்து
அதற்கு அப்பாலும் வளர்ந்து, எதிர் தரியலர் உயிர்மடங்க மடங்கு உளை மடங்கல்
அடங்கு அரு உழுவை முதல்-எதிர்த்து வருகின்ற பகைவர்களுடைய உயிர்கள்
அழியும்படி வளைந்திருக்கின்ற பிடரி மயிரையுடைய சிங்கம் அடங்குதலில்லாத புலி
முதலிய, கொடு பொறி பல உடைத் தாய் தடம் கொளீஇ நின்ற மதில் பெருவாயில்
தடையையும் தடை அற கடந்தான் - கொடிய பல பொறிகளை உடைத்தாய் இடம்
பசந்து நின்ற மதிலின் பெரிய வாயிற்றடையினையும் முட்டில்லாமல் தாண்டிச் சென்றான்.

   (வி - ம்.) அரவப்பாயுடைப் பகவன் எனவே திருமால் என்பது விளங்கியது.
பூமியளக்கும்போது திருமால் வளர்ந்தது போல மதில் உயர்ந்து நிற்கிறது. சிங்கம் புலி
முதலிய கொடிய விலங்குகளின் வடிவமாகப் பொறியமைத்து மதில்களிற்
பொருத்தியிருப்பது மரபு. அப்பொறிகள் வருவாரைக் கொல்லும். சிலப்பதிகாரம்
அடைக்கலக் காதையில் "வளைவிற் பொறியும்... கோலும் குந்தமும் வேலும் பிறவும்"
(வரி 207-216) எனவரும் அடிகளிற் பொறிகள் அமைந்திருப்பது காண்க.
                                                           (231)

     உட்புகும் அரசை முன்புகுந் திருந்த
          ஓரர செதிர்கொளுங்காலை
     விட்புலம் புகழும் மற்றுமோ ரரசு
          விரைவினுட் புகுவது காணூஉ
     நட்புடை இவ்வீ ரரசுநன் கெதிர
          நடப்பஇவ் வாறறா துறலாற்
     கட்புலம் புகாதாம் நெருக்கிடை ஒதுங்கிக்
          கரங்கள்மேல் தூக்கியுட் புகுந்தான்.

   (சொ - ள்.) உள் புகும் அரசைமுன் புகுந்து இருந்த ஓர் அரசு எதிர் கொளும்
காலை - உள்ளே நுழைகின்ற ஓர் அரசன்