பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்189


   அதற்குமுன் நுழைந்திருந்த அரசனை எதிர் கொள்ளுங்காலத்தில் விண்புலம்
புகழும், மற்றும் ஓர் அரசு விரைவின் உள்புகுவது காணூஉ -
விண்ணுலகத்தி்லுள்ளவர்களால் புகழப்பட்ட மற்றோரரசன் விரைவாக உள்ளே நுழைவதைக்
கண்டு, நட்பு உடை இவ் ஈர் அரசும் நன்கு எதிர் நடப்ப இவ்வாறு அறாது உறலால் -
நண்புடைய இவ்விரண்டு அரசர்களும் நன்றாக எதிர் நடக்க இவ்விதம் நீங்காது
பொருந்தியிருத்தலால், கண்புலம் புகாது ஆம் நெருக்கிடை ஒதுங்கி கரங்கள் மேல்தூக்கி
உட்புகுந்தான் - கண்களாகிய புலன்களால் காணமுடியாதாகும் நெருக்கத்தில் விலகிக்
கைகளை மேலே தூக்கிக் கொண்டு உள்ளே புகுந்தான்.

   (வி - ம்.) கோட்டை வாயில் உள்ளே ஓரரசன் சென்றால் மற்றோரரசன் வெளிவர
முயல்கிறான். வெளியில் இருப்பவன் உள் செல்வதற்கு வழியில்லை. இத்தகைய வாயிலில்
இருகைகளையும் தூக்கி உயர்த்திக் குசேலன் சென்றான் என்று கொள்க.         (232)

     விடம்படு வடிவாள் மள்ளருக் கொதுங்கின்
          விரைவினவ் வொதுங்கிடம் வளிபோல்
     திடம்படு பரிகள் தாவிடம் அதற்குந்
          திரிந்தொதுங் கிடுமிடஞ் சீறிக்
     கடம்படு களிறு பாயிடம் அதற்குங்
          கண்டொதுங் கிடுமிடங் கொடிஞ்சி
     இடம்படும் இரதம் முன்பினூ ரிடமற்
          றெவ்விடம் இவனடந் திடுவான்.

   (சொ - ள்.) விடம்படு வடிவாள் மள்ளருக்கு ஒதுங்கின் விரைவின் அ ஒதுங்கின்
விரைவின் அ ஒதுங்கு இடம் - நஞ்சு பொருந்திய கூர்மையான வாளால் போர்
செய்கின்ற வீரர்களுக்கு விரைவாக விலகினால் அவ்வொதுக்கிடம், வளிபோல் திடம்படு
பரிகள் தாவுஇடம் அதற்கும் திரிந்து ஒதுங்கிடும் இடம் - காற்றுப்போல் உறுதியான
குதிரைகள் தாவுகின்ற இடமாம், அதற்கும் விலகி ஒதுங்கிடம், வேறு ஆய்ந்தால் சீறி
கடம்படு களிறு பாய் இடம் - அதற்கும் கண்டு ஒதுங்கிடும்இடம் கோபித்து மதம்
பொழிகின்ற யானைகள் பாய்கின்ற இடமாகும், அதற்கு விலகி ஒதுங்கிடம் தேடின்
கொடிஞ்சிஇடம்படும் இரதம் முன்பின் ஊர் இடம் மற்றுஎ இடம் இவன் நடந்திடுவான்
- மேல் மொட்டுக்களையுடைய பெரிய தேர்கள் முன்னும்பின்னுமாகத் தவழ்கின்ற
இடமாகும், எந்த இடத்தில் குசேலன் செல்லக்கூடியவன் ஆவான்.