பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்191


     ஒளிபெறு கதவந் தட்டிநிற் பாரும்
          உழலுகின் றாருமாய் மைந்தர்
     களிதரப் பயிலப் போகம்விற் றுண்ணுங்
          கணிகையர் சேரியைக் கடந்தான்.

   (சொ - ள்.) வெளிவருவாரும் உள் புகுவாரும் வீதியில் கலாம் விளைப்பாரும் -
வெளியே வருகின்றவர்களும் உள்ளே போகின்றவர்களும் தெருவில் கலகம்
விளைக்கின்றவர்களும், அளி மலர் மாலை சாந்தமும் கொடுபோய் அலங்கரிப்போரும்
முன் வாயில் ஒளிபெறும் கதவம் தட்டி நிற்பாரும் உழலுகின்றாரும் ஆய் - வண்டுகள்
மொய்க்கின்ற மாலைகளையும் சந்தனத்தையும் கொண்டு போய்
அழகுபடுத்துகின்றவர்களும், முன்வாசலிலுள்ள கதவுகளைத் தட்டிக்கொண்டு
நிற்பவர்களும் அலைகின்றவர்களுமாகி, மைந்தர் களிதர பயில்போகம் விற்று உண்ணும்
கணிகையர் சேரியை கடந்தான் - இளைஞர்கள் மகிழ்ச்சியில் பொருந்த இன்பத்தை
விலைக்குக் கொடுத்து வாழ்கின்ற விலை மாதர் குடியிருக்கும் இடத்தையும் கடந்தான்.

   (வி - ம்.) விலைமாதர் வீதிச் சிறப்புக் கூறுகின்றார். உண்ணும் - உண்டு வாழும்
வாழ்வைக் குறித்தது.                                          (235)

     சங்கரிந் தெடுத்தாற் போன்றவால் அரியாற்
          சமைத்திடப் படுபுழுக் கலுந்தீம்
     பொங்குபாற் குழம்பும் அளையுமாச் சியமும்
          பொருவில்பல் சுவைக்கறி களுந்தேன்
     தங்குமுக் கனியும் அமைத்துண்பார்க் குதவத்
          தக்கபொன் முதலவள் ளனவென்
     றெங்குமா ராய்வுற் றழைத்திடும் பின்னோர்
          இருந்தெரு நோக்கியுள் மகிழ்ந்தான்

   (சொ - ள்.) சங்கு அரிந்து எடுத்தால் போன்ற வால் அரியால் சமைத்திடப்படும்
புழுக்கலும் - சங்கினை அறுத்துச் சிறியதாக எடுத்தாற்போன்ற வெண்மையான அரிசியால்
சமைக்கப் பட்டுள்ள சோறும், தீம்பொங்கு பால் குழம்பும், அளையும் ஆச்சியமும் -
இனிமையாகிய பொங்கி எழுகின்ற பாற்குழம்பும் தயிரும் நெய்யும், பொருவுஇல் பல்
சுவைகறிகளும் தேன் தங்கு முக்கனியும் அமைத்து உண்பார்க்கு - ஒப்பற்ற
பலவகைப்பட்ட சுவையையுடைய கறிகளும் தேன் பொருந்திய (வாழை, மா, பலா
ஆகிய) மூன்று பழங்களும் அமைத்துக் கொண்டு உண்கின்றவர்