பக்கம் எண் :

192 குசேலோபாக்கியானம்

களுக்கு, உதவத்தக்க பொன் முதல் உள்ளன என்று எங்கும் ஆராய்வுற்று
அழைத்திடும் பின்னோர் இருதெரு நோக்கி உள் மகிழ்ந்தான் - உதவக்கூடிய
பொன் முதலியன இருக்கின்றன என்று எவ்விடத்தும் ஆராய்ச்சி செய்து
அழைக்கின்ற குலத்தில் பின்னோரானவர் (இரு வேளாளர்) இருக்கின்ற தெருவைப்
பார்த்து மனம் மகிழ்ந்தான்.

   (வி - ம்.) உழுதுண்போர், உழுவித்துண்போர் என்னும் இருவேளாளர்
தெருவைக் கண்டு மனம் மகிழ்ந்தான் குசேலன். வால்அரி - வெள்ளை அரிசி.
அளை - தயிர். ஆச்சியம் - நெய.்                                (236)

     குருமலர் வெண்பொற் கட்டிமூன் றமைத்த
          குமுதத்திற் பொற்கலஞ் செறித்துப்
     பொருவது பனிநீர் உலையின்முத் தரிசி
          புகட்டியொண் மணித்தழ லிட்டுத்
     திருகில்வித் துரும இந்தன மடுக்கித்
          திருமலி வணிகர்தந் தெருவின்
     அருமைசால் சிறிய பிணாக்கள்பண் ணையினும்
          அடுந்தொழில் கற்பது கண்டான்.

   (சொ - ள்.) குருமலர் வெண்பொன் கட்டி மூன்று அமைத்த குமுதத்தில் பொன்கலம்
செறித்து - ஒளி சிறந்த வெள்ளிக்கட்டிகள் மூன்றால் அமைந்த அடுப்பில், பொருவு
அறு பனிநீர் உலையில் முத்து அரிசி புகட்டி ஒள் மணி தழல் இட்டு - ஒப்பற்ற பனிநீர்
ஊற்றிய உலையில் முத்துக்களாகிய அரிசியைப் பெய்து ஒண்மையான மாணிக்கமாகிய
நெருப்பையிட்டு, திருகு இல்வித்துருமம் இந்தனம் அடுக்கி திருமலி வணிகர் தம்தெருவில்-
மாறுபாடில்லாத பவளமாகிய விறகை அடுக்கிச்செல்வம் மிகுந்த வணிகர் தெருவில்,
அருமைசால் சிறிய பிணாக்கள் பண்ணையினும் அடும் தொழில் கற்பது கண்டான் -
அருமை நிறைந்த சிறுமிகள் விளையாட்டிலும் சமைக்கும் தொழிலைக் கற்பதைக் கண்டான்.

   (வி - ம்.) சிறுமியர் விளையாடல் கண்டான் குசேலன். வணிகச் சிறுமியர் அவர்.
செல்வச் சிறப்புவாய்ந்த கன்னியர் என்பதை அவர் விளையாடற் குறிப்பாற் காணலாம்.
வெள்ளிக் கட்டி அடுப்பு, தங்கக்கலம், பனிநீர்உலை, முத்து அரிசி, மணித்தீ, பவள
விறகு இவை வைத்துச் சிறுவீடு கட்டி விளையாடின் அவர்கள் செல்வப் பெருக்குச்
சொல்ல இயலுமோ ? இயலாது என்க.
                                                          (237)