பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்193


     ஆப்பியால் மெழுகி முத்தநுண் துகளான்
          அவிர்தரு கோலமும் இயற்றிப்
     பூப்புனை கூந்தற் பார்ப்பன மகளிர்
          பொலிமற்றைப் பணிதலை நிற்பத்
     தூப்பயில் உபக ரணங்கொடு மறையோர்
          துணர்த்தழல் வளர்த்தவி அமரர்க்
     கூப்பிடு பளிக்கும் பன்மகச் சாலைக்
          கூட்டமாங் காங்குகண் டுவந்தான்.

   (சொ - ள்.) பூ புனைகூந்தல் பார்ப்பன மகளிர்-பூவால் அழகு படுத்தியுள்ள
கூந்தலைக் கொண்ட பார்ப்பன மாதர், ஆப்பியால் மெழுகி முத்தம் நுண்துகளால்
அவிர்தரு கோலமும் இயற்றி-பசுவின் சாணத்தால் மெழுகிட்டு முத்தின் சிறுதுகளாகிய
பொடியால் விளங்குகின்ற கோலமுமி்ட்டு, பொலிமற்றை பணிதலை நிற்ப-விளங்குகின்ற
தம்வீட்டு வேலைகளையும் உடன்பட்டுச் செய்து நிற்க, தூபயில் உபகரணங் கொடு
மறையோர் துணர் தழல் வளர்த்து-தூய்மை பொருந்திய துணைக் கருவிகள் கொண்டு
கொழுந்து விட்டெரியும் நெருப்பை உண்டாக்கி, அமரர் கூப்பிடுபு ஆவி அளிக்கும்
பல்மகம் சாலைக்கூட்டம் ஆங்கு ஆங்கு கண்டு உவந்தான் - தேவர்களையழைத்து
அவர்களுக்குக் கொடுக்கும் அவிப்பாகத்தை விளைக்கும் பலவாகிய வேள்விச் சாலைத்
தொகுதிகளை அவ்வவ்விடங்களில் பார்த்து மகிழ்ந்தான்.

   (வி - ம்.) ஆப்பி-சாணம், பீ என்பது குறைந்து நின்றது. ஆ-பசு, உபகரணம்-
வடமொழி. துணைக்கருவி என்பது பொருள்.
                                                        (238)

     கறைதபு கலைத்தோல் முடிந்தபூ ணூலர்
          கவின்தரு முஞ்சிநாண் அரையில்
     நிறைதரு தானைச் சொருக்குமுன் தூங்க
          நீளவிட் டவர்குழாங் கூடி
     மறைபல கற்குங் கிடைகளும் நடைதேர்
          மாண்புடை யாசிரி யன்சொல்
     குறைவற உணர்த்தும் பெருமையுங் கண்டுங்
          கேட்டுமுள் உவகைகூர்ந் தனனால்.

   (சொ - ள்.) கறைதபு கலைத்தோல் முடிந்த பூண் நூலர் கவின்தரு முஞ்சிநாண்
அரையில் நிறைதரு தானை சொருக்க முன்தூங்க - குற்றம் நீங்கிய மான் தோலை
முடித்த பூணூல் தரித்தவராய் முஞ்சியென்னும் தருப்பைக் கயிறு இடையில் நிறைந்