|
திருக்கின்ற ஆடைச்சொருதலுடன் தொங்கும்படி
; நீளவிட்டவர் குழாம்கூடி மறைபல
கற்கும் இடைகளும்-நீளமாக விட்டவர்கள் கூட்டம் திரண்டு மறைகள் பலவற்றைப்
பயில்கின்ற இடங்களும், நடைதோ மாண்பு உடை ஆசிரியன் சொல் குறைவு அற
உணர்த்தும் பெருமையும் கண்டும் கேட்டும் உள் உவகை கூர்ந்தனன் - ஒழுக்கத்தில்
சிறந்த மாட்சி அமைந்த ஆசிரியர் சொல்வதிற் குறைவின்றி விளக்கி உணர்த்துகின்ற
பெருமையும் பார்த்தும் கேள்வியுற்றும் உள்ளத்தில் மகிழ்ச்சி மிக்கவனானான். ஆல்:
அசை.
(வி - ம்.) மறையோர் சிறுவர் வேதங்கள் பயிலும் இடங்களும்,
ஆசிரியர் பல
கலைகள் மாணவர்க் குணர்த்தும் இடங்களும் கண்டு களித்தான் குசேலன் என்பது.
மான்றோல் முடிந்தபூணூல். முஞ்சி-தருப்பை ; இது அரை நாணிற் கட்டப்படுவது.
(239)
சீதளப் பளிக்கு மாடமேல் மடவார்
செறிதரு புலவியில்
வெறுத்த
தீதறு மணிப்பொன் தரளமா லிகைகள்
செல்பவர் காலுறப்
பின்னி
மாதர்மேல் மைந்தர் மைந்தர்மேன் மாதர்
மாறிவீழ் தரவடிக்
கடிசெய்
ஏதமில் அரச வீதியிற் புகுந்தான்
இருந்தவக் குசேலமா
முனிவன்.
(சொ - ள்.) சீதளம் பளிங்கு மாடம்மேல் மடவார் செறிதரு புலவியில்
வெறுத்த
தீது அறு மணிபொன் தரளமாலிகைகள் செல்பவர் கால்உற பின்னி - குளிர்ந்த
பளிங்கினாலாகிய மாடத்தின்மேல் இளமாதர் தம் கணவருடன் ஏற்பட்ட பிணக்கால்
வெறுப்புற்று வீசிய குற்றமற்ற பொன்மாலை, மணிமாலை, முத்துமாலைகள் செல்கின்றவர்
கால்களை மிகுதியும் பிணைத்து ; மாதர்மேல் மைந்தர் மைந்தர்மேல் மாதர் மாறி
வீழ்தர - பெண்டிர்மேல் ஆடவரும், ஆடவர்மேல் பெண்டிரும் மாறி விழும்படி,
அடிக்கடி செய் ஏதம்இல் அரசவீதியில் புகுந்தான் இருதவம் குசேலமா முனிவன் -
அடிக்கடி செய்யப்படுகின்ற குற்றமில்லாத அரசர் தெருவில் பெருந்தவத்தைக்கொண்ட
குசேலமாமுனிவன் நுழைந்தான்.
(வி - ம்.) மன்னர் வீதியிற் செல்லும் மகளிர் பரத்தையரும்
மன்னர்குலம் தோன்றிய
இளைஞரும் ஆதலால் அவர்கள் ஒருவர்மேலொருவர் விழுவது மகிழ்ச்சியாகக் கருதினர்
என்பதும் நிலத்தில் வீழாமல் ஒருவர்மேல் விழுதலால் துன்பமடையாமலும் எழுந்து
செல்வார் என்பதும் குறிப்பாகத் தோன்ற "அடிக்கடி செய் ஏதமில் அரசர்வீதி" எனறார்
என்பது குறிப்பு.
(240)
|