|
புரைதபச்
செறித்துக் கட்டிய மணியாற்
புனைந்ததோ
ரணங்களின் மீது
திரைநரை மூப்பில் அமரரூர் விமானஞ்
சிக்குண்டு கிடப்பதுங்
கண்டான்.
(சொ - ள்.) வரைமிசை முளைத்த கழைநுனி கழன்ற மாசுணம் உரி அசைந்தாற்
போல் நிரைபடு மாடச்சிகை நடுபதாகை நெடுமரத் துகில் அசைவதுவும் - மலைமேல்
முளைத்த மூங்கிலின் நுனியில் கழற்றப்பட்ட பாம்புத் தோலானது அசைந்ததாற்போல
வரிசையாகவுள்ள மாடங்களின் உச்சியில் நடப்பட்ட கொடிகளின் சீலைகள் அசைவதையும்,
புரைதப செறித்து கட்டிய மணியால் புனைந்த தோரணங்களின்மீது திரை நரை மூப்புஇல்
அமரர்ஊர் விமானம் சிக்குண்டு கிடப்பது கண்டான் - குற்றமில்லாதபடி திணித்துக்
கட்டிய மணிகளால் அலங்கரித்த தோரணங்களில் திரைதலும் நரைத்தலும் மூத்தலும்
இல்லாத தேவர்கள் ஊர்ந்து செல்லுகின்ற ஊர்திகள் சிக்குப்பட்டுக் கிடப்பதையும்
பார்த்தான்.
(வி - ம்.) மலைமேல் நிற்கும் மூங்கில்நுனியிற் பாம்பு கழற்றிய
உரி (சட்டை)
அசைவதுபோல் மாளிகைமேல் நட்ட மரத்திற் கொடிச்சேலை யசைந்தது என்று உவமை
காண்க. தோரணங்களின்மேல் வானவர் விமானம் சிக்கிக்கிடப்பது நெருக்கத்தால்
எனவுணர்க. (242)
பாற்றினஞ் சுழலும் வசிநுதி நெடுவேல்
பார்த்திபர்
முன்கடிப் போச்சும்
ஏற்றுரி முரச வேற்றிடி முழக்கம்
எழுதலும் வெளில்தபுத்
தெழுந்து
கூற்றுமுள் நடுங்க எதிர்பரிக் காரர்
குறுகிடா வகைசெலுங்
களிறு
காற்றுவெம் பரிவி லாழிநீர்ச் சேற்றில்
கால்பதிந்
தெழாவகை கண்டான்.
(சொ - ள்.) பாறு இனம் சுழலும் வசிநுதி நெடுவேல் பார்த்திபர்முன்
கடிப்பு
ஓச்சும் - பருந்துக் கூட்டங்கள் வட்டமிடுகின்ற கூரிய முனையையுடைய நீண்ட வேற்படை
தாங்கிய அரசர்முன் குறுந்தடியால் எழுப்பும் ஒசையும், ஏறுஉரி முரசும் வேறு இடிமுழக்கம்
எழுதலும் வெளில்தபுத்து எழுந்து - காளை மாட்டுத்தோலால் அமைந்த முரசின்
வெவ்வேறாக ஒலிக்கும் இடிபோன்ற ஓசையும் தோன்றியதனாற் கட்டுத் தறியையும்
|