|
முறித்து எழுந்து, கூற்றும் உள் நடுங்க எதிர்பரிக்காரர்
குறு கிடா வகை செல்லும் களிறு
- யமனும் மனம் நடுங்கும்படியாகத் தாக்கக்கூடிய குதிரை வீரர்கள் அணுகாதபடி
செல்கின்ற ஆண்யானை, காற்று வெம்பரியின் விலாழிநீர் சேற்றில் கால் பதிந்து எழாவகை
கண்டான் - காற்றைப்போல் விரைந்து செல்லும் கொடிய குதிரையின் நுரைநீர்ச் சேற்றில்
கால்கள் பதிந்து எழக்கூடாத தன்மையைக் கண்டான்.
(வி - ம்.) முரசின் ஒலிகேட்டு மதயானையானது போர்ப் பறையொலி
எனக் கருதிக்
கட்டுத் தறியையும் முறித்துப் பாகனையும் மதியாது செல்லும் யானை என்றும்,
அவ்வாறு விரைந்து சென்ற யானைகள் குதிரை வாய் நுரைச்சேற்றில் கால் அகப்ப்ட்டு
இழுக்கவராது நின்றன என்றும், அச்செயலை வியந்து கண்டான் குசேலன் என்றும்
கூறினர். யானைகள் மதங்கொண்டவை என்பதும் குதிரை மிகுதி என்பதும் இதனால்
விளங்கும். (243)
தம்மிடை ஏற்றார் அவரிடைச் சிறந்த
தரணிமன் னவரும்வந்
தேற்பச்
செம்மையிற் கொடுக்கும் பொருளுட னொழுக்குஞ்
செழுங்கர கப்புனல்
பெருகி
மும்மைநல் லுலகும் வியப்பநீள் நதியாய்
முடுகிடக் கதிரவன்
உறுத்தும்
வெம்மைதீர் பாக்குச் சிறுவர்கைத் தோணி
விட்டுலாய்
ஆடுதல் கண்டான்.
(சொ - ள்.) தம்இடை ஏற்றார் அவர் இடை சிறந்த தரணி மன்னவரும்
வந்துஏற்ப
- தம்மிடத்தில் ஏற்றவராகிய அவரிடத்தில் மேலான பூபாலரும் வந்து இரக்க, செம்மையின்
கொடுக்கும் பொருளுடன் ஒழுக்கும் செழுகரகப்புனல் பெருகி - செவ்வையாகக்
கொடுக்கப்படும் பொருளுடன் ஒழுகும்படி விடப்படுகின்ற தாரைநீர் பெருக்கெடுத்து,
மும்மைநல் உலகும் வியப்ப நீள் நதியாய் முடுகிட - மூன்றாகிய நல்ல
உலகத்திலுள்ளவர்கள் வியக்கும் படி நெடிய ஆறாகி விரைந்து ஒட, கதிரவன் உறுத்தும்
வெம்மை தீர்பாக்கு சிறுவர்கைத் தோணிவிட்டு உலாய் ஆடுதல் கண்டான் - பகலவன்
சுடுகின்ற வெப்பம் நீங்கும்பொருட்டுச் சிறுவர்கள் சிறு தோணிகள் விட்டு உலவி
விளையாடுதலைக் கண்டான்.
(வி - ம்.) வேண்டும் பொருள் வழங்கும் வள்ளல்கள் தாரைவார்த்துக்
கொடுக்கும்போது ஒழுகும் நீர் திரண்டு ஆறாக ஒடும் என்பதும், அதில் சிறுவர்
தோணிசெலுத்தி விளையாடுவர் என்பதும் இதிற் கூறப்பட்டது. கொடைச் சிறப்புக்
கூறியது இது. (244)
|