பக்கம் எண் :

198 குசேலோபாக்கியானம்

     தெள்ளிய தரளம் நீற்றிய சுண்ணந்
          தீற்றிய மாடவாய் தோறும்
     வெள்ளியால் பொன்னால் பதுமரா கத்தால்
          வித்துரு மத்தினான் மற்றை
     ஒள்ளிய மணியால் அமைத்தகந் திகள்மீ
          உயர்கத லிகள்பசுங் கழைகள்
     உள்ளிய வானத் தலமர நிறுத்தி
          உறுத்தபல் லணிகளுங் கண்டான்.

   (சொ - ள்.) தெள்ளிய தரளம் நீற்றிய சுண்ணம் தீற்றிய மாடவாய் தோறும் -
தெளிவான முத்துப் பொடியால் பூசப்பட்ட மாடங்களின் வாயில்கள் எங்கும், வெள்ளியால்
பொன்னால் பதுமராகத்தால் வித்துருமத்தினால் மற்றை ஒள்ளிய மணியால் அமைத்த -
வெள்ளியினாலும், பொன்னாலும் பதுமராகத்தாலும், பவளத்தாலும் மற்ற வேறான
ஒட்பமாகிய மாணிக்கங்களாலும் அமைத்துள்ள, கந்திகள் மீஉயர் கதலிகள் பசுங்கழைகள்
உள்ளிய வானத்து அலமர நிறுத்தி உறுத்த பல் அணிகளும் கண்டான் - பாக்குமரங்கள்
மேலே உயர்ந்த வாழைமரங்கள் பசுமையான கரும்புகள் கருதப்பட்ட விண்ணிற்
சுழலும்படி நிறுத்தி அழகுசெய்தல் ஆகிய பல அணிகளையும் கண்டான்.

   (வி - ம்.) அந்நகரத்துச் சுண்ணச் சாந்து முத்துக்களை நீற்றியது. இப்பி சங்கு
முதலியவற்றாற் செய்யப்பட்டது அன்று என்று கொள்க. வெள்ளி முதலியவற்றா னமைத்த
கமுகு, வாழை, கரும்பு இவற்றை விண்ணிற் சுழலும்படி தம் மாளிகைமுன் நட்டனர்.
அவ்வழகினைக் குசேலன் கண்டான் எனக்கொள்க.
                                                          (245)

     தம்மையூர் இறைவன் நகர்வளங் கண்ட
          சலதரக் குலமவன் பின்னோன்
     செம்மையா ரரசு புரிநகர் வளத்தின்
          சிறப்புநோக் கிடல்குறித் தாங்குத்
     தும்முதீப் பொறிய வேலின் மைந்தர்
          துணைவிய ரோடுதுன் பமரும்
     விம்முவான் செல்வ மாடமா ளிகையின்
          மேல்தவழ்ந் திடுவன கண்டான்.

   (சொ - ள்.) தம்மை ஊர் இறைவன் நகர்வளம் கண்ட சலதரம்குலம் அவன்
பின்னோன் செம்மைஆர் அரசபுரி நகர்