|
வளத்தின் சிறப்பும் - தங்களை ஏறி நடத்துகின்ற
அரசனாகிய இந்திரனது அமராவதி
நகரின் செல்வப்பெருக்கைக்கண்ட மேகக் கூட்டங்கள் அவன் தம்பியாகிய கண்ணபிரான்
அரசு செய்கின்ற நகரின் செல்வச் சிறப்பையும், நோக்கிடல் குறித்து ஆங்கு, தும்மு
தீ
பொறிய வேல் இளமைந்தர் துணைவியரோடும் இன்பு அமரும் விம்முவான் செல்வம்
மாடமாளிகையின்மேல் தவழ்நிதிடு வன கண்டான் - பார்க்கக் கருதியதுபோல வீசுகின்ற
நெருப்புப் பொறிகளையுடைய வேற்படையைத் தாங்கிய இளமை ஆடவர் இனப்ம்
பொருந்திய தம் மனைவியர்களுடன் பெருகுகின்ற உயர்ந்த செல்வத்தையுடைய
மாடமாளிகையின்மீது தவழ்வன வற்றைக் கண்டான்.
(வி - ம்.) மேகங்க்ள், தம்மை வாகனமாகக்கொண்ட இந்திரன்
நகரத்தினும்
அவன் பின்னோன் (உபேந்திரன்) ஆகிய கண்ணன் நகரம் எழின்மிக்கதா ? என்று
காண்பதற்கு வந்து தவழ்ந்ததுபோலப் படிந்திருந்தன என்பது கருத்து. இது தற்
குறிப்பேற்றவணி. தும்முதீப் பொறியவேல் - தீப்பொறி சிதறும் வேல். திருமால்
ஒருகாலத்தில் இந்திரனுக்குத் துணையாக இருந்து விண்ணுலகம் புரந்தான் என்பது
வரலாறு. அதனால் அவனை உபேந்திரன் எனக் கூறுவர். சலதரம் - மேகம், சலத்தைத்
தாங்கியிருப்பது என்பது காரணப்பெயர்.
(246)
மன்னர்தம் பவளக் காற்குடை பிச்சம்
வரைந்திடு கேதன
மொலியல்
நன்னர்கொள் சிவிறி ஆலவட் டங்கள்
நனிதுவன் றாஇருள்
பரப்பப்
பன்னக மணியும் வயிரமும் முத்தும்
பதித்தபொன்
மகுடமுங் குழையும்
மின்னல்செய் வாகு வலயமும் வாளும்
வெயிலுறப் பரப்புதல்
கண்டான்.
(சொ - ள்.) மன்னர்தம் பவளம் கால்குடைப் பிச்சம் வரைந்திடு
கேதனம் -
அரசருடைய பவளக் காம்புடைய குடைகளும் மயிற்பீலிக் குஞ்சங்களும்
வரையறுக்கப்பட்ட கொடிகளும், ஒலியல் நன்னர்கொள் சிவிறி ஆலவட்டங்கள் நனி
துவன்றா இருள்பரப்ப - துணியை நன்றாகக் கொண்டுள்ள விசிறிகளும், பெரிய
விசிறிகளும் மிகநெருங்கிய இருளைப் பரவும்படி செய்ய, பன்னகம் மணியும் வயிரமும்
முத்தும் பதித்தபொன் மகுடமும் குழையும் - பாம்பின் மாணிக்கத்தையும் வயிரத்தையும்
முத்தையும் அழுத்திச்செய்த பொன்னாலாகிய கிரீடங்களும்
|