(சொ
- ள்.) தார் ஆரும் புயம் தேவராச வள்ளல் - பூமாலை புனைந்த
தோள்களையுடைய தேவராசனென்னும் வள்ளன்மையுடையோன் ; ஏர் ஆரும் சகாத்தம்
ஆயிரத்து எழுநூற்று எழுபத்து இரண்டில் நிகழ் - அழகு பொருந்திய சாலிவாகன
சகாத்தம் ஆயிரத்தெழு நூற்றெழுபத்திரண்டில் நிகழ்வதாகிய ; நல் சௌமிய
ஆண்டு தனு திங்கள் வார் ஆரும் இருபத்து நான்காம் நாள் பரிதிவாரம்
ஒன்பான் திதி சோதி சிங்கம் இலக்கினத்தில்-நலம்மிகுந்த சௌமிய ஆண்டும்,
மார்கழி்த் திங்களும், நீட்டமான இருபத்து நாலாம் நாளும், ஞாயிற்றுக்
கிழமையும், நவமிதிதியும், சுவாதி நட்சத்திரமும், சிங்க இலக்கினமும் ஒருங்கு
நிகழும் நன்னாளில்; பேர் ஆரும் குசேலமுனி தனது சரித்திரத்தை பெட்பின்
இனிது அருந்தமிழின் இயல் செறிய பாடி-பெருமை நிறைந்த குசேலமுனிவனது
வரலாற்றை விருப்பத்தோடு இனிதாகிய அரிய தமிழிலக்கணம் அமைதரப்
பாடி ; ஆன்றோர் தழைத்து உவகை பூப்ப அரங்கு ஏற்றினான் - பெரியோர்
உடல் பூரித்து மனங்களிப்படைய மனமகிழ்ந்து அரங்கேற்றினான்.
(வி - ம்.) நூல் அரங்கேற்றிய காலம் விளக்கமாக இக் கவியிற்
கூறப்படுகிறது.
சாலிவாகன சகாப்தம் 1772, சௌமிய ஆண்டு, மார்கழித்திங்கள் இருபத்து
நான்காம் நாள், ஞாயிற்றுக்கிழமை, நவமிதிதி, சுவாதி நட்சத்திரம், சிங்க
விலக்கினம் கூடிய நாள் அரங்கேற்றிய நாள் என அறிக, இயல் செறியப்பாடி -
இலக்கணம் பொருந்தப் பாடி, முன்னோர்கள் வகுத்த எழுத்து, சொல்,
பொருள், யாப்பு, அணி என்ற ஐவகையிலக்கணமும் அமையும்படி என
விரித்துக்கொள்க. (20)
எழுசீரடி
ஆசிரிய விருத்தம்
சீர்வளர் குசேலோ பாக்கியா னத்தைச்
செந்தமிழ்ப்
பாவினிற் செய்கென்
றார்வளர் திருவூர்ச் சீனிவா சேந்த்ரன்
ஆர்வமிக் கூர்தரப்
புகலக்
கார்வளர் வல்லூர்த் தேவரா சப்பேர்க்
கவிச்சக்ர வர்த்திசெய்
தளித்தான்
ஏர்வள ரியன்முற் றுணர்ந்தநற் புலவர்
இன்புளங் கொண்டிட
மாதோ.
(சொ - ள்.) சீர்வளர் குசேலோ பாக்கியானத்தை செந்தமிழ் பாவினில்
செய்க
என்று - சிறப்பு வளர்கின்ற குசேலோபாக்கியானம் என்னும் இந்நூலினைச் செந்தமிழ்ப்
பாக்களால் இயற்றுகவென்று ; ஆர்வளர் திருவூர் சீனிவாசேந்திரன்
|
|
|
|