பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்21


ஆர்வம் மிக்கு ஊர்தர் புகல - ஒளி வளர்கின்ற திருவூரில் வாழ்கின்ற
சீனிவாச இந்திரன் விருப்பமிகுதியாற் சொல்ல ; கார்வளர் வல்லூர் தேவராசன்
பேர் கவி சக்கரவர்த்தி - பொழில்களில் மேகங்கள் வந்து படிதற்கிடமான
வல்லூரில் வாழும் தேவராசன் என்னும் இயற்பெயரை உடைய கவிச்
சக்கரவர்த்தியானவன் ; ஏர்வளர் இயல் முற்று உணர்ந்து நல்புலவர் இன்பு
உளம் கொண்டிட - எழில் வளரும் சிறந்த புலவர் மனங்களிக்கும்படி ;
செய்து அளித்தான் - இயற்றியருளி உதவினன்.

   (வி - ம்.) இக்கவி மற்றும் ஒரு புலவர் பாடிய சிறப்புப் பாயிரம் எனத்
தெரிகிறது. முன்னர்க் கூறியவர் இருவர் பாடுவித்தோர் எனப் பகர்ந்தார். இப்புலவர்
இருவரிற் சிறந்த ஒருவனாகிய சீநிவாசன் என்பவனே பாடுவித்தான் எனக் கூறினர்.
செய்க என என்பது செய்கென அகரங்குறைந்து நின்றது. தொகுத்தல் என்ற
விகாரம். (21)

               அறுசீரடி ஆசிரிய விருத்தம்
     தாமநறு முளரிதுயல் வருதடந்தோள்
          எழில்வீராச் சாமி ஈன்ற
     காமருசீர்த் தேவரா சப்பெரியோன்
          பலகலைதேர் கவிஞர் உள்ளம்
     ஏமமுறக் குசேலசரி தம்பகரும்
          நற்றிறன்முன் எண்ணி யன்றே
     வாமனன்திண் தோள்ககுபந் தாவவுடல்
          பூரித்தான் வையத் தீரே.

   (சொ - ள்.) நறு முளரி தாமம் துயல்வரு தடதோள் எழில் வீராச்சாமி ஈன்ற -
நல்ல மணமுள்ள தாமரை மலர்மாலையானது அசைகின்ற பெரிய தோள்களையுடைய
வீராச்சாமி பெற்ற ; காமருசீர் தேவராச பெரியோன் - அழகும் சிறப்பும் பொருந்திய
தேவராசனென்னும் மேன்மையோன் ; பல கலைதேர் கவிஞர் உள்ளம் ஏமம் உற - பல
நூல்களையுங் கற்றுணர்ந்த புலவர்களின் மனம் களிப்புமிகும்படி ; குசேல சரிதம்
பகரும் நல்திறன்முன் எண்ணியன்றே - குசேல முனிவரது வரலாற்றைச் சொல்லப்புகும்
நல்ல திறத்தினை முற்காலத்தில் எண்ணியதால் அல்லவோ ; வையத்தீரே -
உலகத்தில் உள்ள மாந்தர்காள் ; வாமனன் திண்தோள் ககுபம் தாவ உடல்
பூரித்தான் - திருமாலின் தோற்றமான வாமன மூர்த்தியானவன் (தன்) வலிய
தோள்கள். திசைகளிற் சென்று அளாவ வளர்ந்து உடம்பு பூரித்தான்.