|
பொற்றைநன்
மாடத் தும்பரோர் மடந்தை
புரிகுழற் றரளவெண்
பிறையும்
மற்றொரு மாடத் தும்பரிற் றங்கும்
மங்குலிற் செறிந்தவெண்
பிறையுங்
கற்றவர் புகழும் பெருந்தவ முனிவன்
கண்டிரு பிறைகளுள்
ளனவோ
உற்றவித் தன்மை என்னென மயங்கி
உண்மைதேர்ந்
துள்நகை கொண்டான்.
(சொ - ள்.) பொற்றைநல் மாடத்து உம்பர்ஓர் மடந்தை புரிகுழல்
தரளவெண்
பிறையும் - மலைபோன்ற அழகிய மாடத்தின்மீது ஓர் இளம்பெண் முறுக்குற்ற
கூந்தலின் முத்தினாற் செய்யப்பட்ட வெண்பிறையையும், மற்றொரு மாடத்து
உம்பரில் தங்கும் மங்குலில் செறிந்த வெண்பிறையும்-வேறொரு மாடத்தின் மீது
பொருந்தியுள்ள மேகத்திற் சேர்ந்துள்ள வெள்ளிய பிறையையும், கற்றவர் புகழும்
பெருந்தவ முனிவன் கண்டுஇரு பிறைகள் உள்ளனவோ உற்றஇத் தன்மை என்என
மயங்கி உண்மை தேர்ந்து உள்நகை கொண்டான் - கல்வியறிஞர்கள் புகழுகின்ற
பெரிய தவத்தையுடைய முனிவனான குசேலன் இரண்டு பிறைகள்
பொருந்தியிருக்கின்ற இவ்வியல்பு என்ன என்பதாகக் கலங்கி உண்மையை உணர்ந்து
உள்ளத்தில் மகிழ்ச்சியுற்றான்.
(வி - ம்.) உலகில் தோன்றுவது ஒருபிறைதானே. இங்கு ஒரு மாடத்தில்
ஒரு
பிறையுள்ளது. மற்றொரு மாடத்திலும் பிறை தோன்றுகிறதே என்று ஐயங்கொண்டு பின்
ஆய்ந்து பெண்கள் நெற்றியில் அணியும் நிலாப்பிறை என்ற ஓர் அணி மற்றொன்று
என்று உண்மையுணர்ந்துள்ள மகிழ்ந்தான் என்பது. கூந்தல் மேகம்போன்று தோன்றிற்று
அவ்விணி பிறைபோலத் தோன்றிற்று எனக்கொள்க. (249)
நவமணி மாட மீமிசை யிட்ட
நறும்பரி யங்கத்தின்
நன்கு
துவளிடை மடவா ரொடுநல னுகர்ந்த
தோள்வலி மைந்தர்க
ளவர்பூ
இவர்குழல் சேர்த்துக் கட்டிடக் கதிர்நாண்
எடுத்தனர் மயங்குபண்
மையிற்றாழ்
உவர்குடி குயினிற் கட்டின ரதனை
உறுமின்னே என்னவுட்
கொண்டான்.
|