|
(சொ - ள்.) நவமணி
மாட மீமிசை இட்டநறு பரியங்கத்தில் நன்குதுவள்
இடைமடவாரொடு - நவமணிகள் அழுத்திய மாடங்களின் உச்சி்யில் மணமுள்ள கட்டிலில்
நன்றாக அசைகின்ற இடையையுடைய இளம்பெண்களுடன், நலன் நுகர்ந்த தோள்வலி
மைந்தர்கள் அவர் பூஇவர்குழல் சேர்த்துக் கட்டிடக் கதிர்நாண் எடுத்தனர் - இன்பத்தை
அடைந்த தோள்வலியுடைய மைந்தர்கள் அம்மாதரது மலரையணிந்த கூந்தலைச் சேர்த்துக்
கட்டுதற்கு ஒளியாகிய கயிற்றை எடுத்தவர், மயங்குபு அண்மையின் தாழ்உவர்குடி
குயினிற் கட்டினர் அதனை உறும் மின்னே என்ன உட்கொண்டான் - மயங்கி
அண்மையிலுள்ள கடனீர் குடித்த கரிய மேகத்திற் கட்டினார்கள். அதனைப் பொருந்திய
மின்னலென்பதாகவே கருதினான்.
(வி - ம்.) இன்பம் நுகர்ந்தபோது கூந்தல் அவிழ்ந்தது. அதனைக்கட்ட
ஒளிபொருந்திய கயிற்றையெடுத்தவர் அண்மையில் இருந்த கரிய மேகத்தினைக் கட்டினர்.
அதனைப் பார்த்த போது மேகத்திற் றோன்று மின்னலாகவே புலப்பட்டது. அதனையுங்
கண்டான் குசேலன் என்பது. (250)
பாயொளி விரிக்கும் பொற்றக டிணங்கப்
பதித்துநன்
கியற்றிய மறுகின்
மேயின அரசர் வில்லிடும் மகுடம்
மிடைதலின்
ஒன்றொடொன் றுரிஞச்
சேயபன் மணியும் வயிரமும் மற்றுஞ்
சிதர்தர உதிர்ந்துதங்
குவதாற்
காயும்வெம் பரல்போல் செல்லுகின் றார்தங்
காலிடை உறுத்துதல்
கண்டான்.
(சொ - ள்.) பாய்ஒளி விரிக்கும் பொன்தகடு இணங்க பதித்து
நன்கு இயற்றிய
மறுகில்-பரந்த ஒளியைப் பரப்புகின்ற பொன்னாலாகிய தகட்டை இணங்கும்படி அழுத்தி
நன்றாகச் செய்யப்பட்ட வீதியில், மேயின அரசர் வில்இடு மகுடம் மிடைதலின் ஒன்றோடு
ஒன்று உரிஞ - வீதியிற் செல்லும் அரசர்களின் ஒளி வீசுகின்ற மகுடக்தோடு மகுடம்
நெருங்குதலால் ஒன்றோடு ஒன்று உராய, சேயபல் மணியும் வயிரமும் மற்றும் சிதர்தர
உதிர்ந்து தங்குவதால்-சிவந்த பலமணிகளும் வயிரங்களும் மற்று முள்ளவைகளும்
சிதறி உதிர்ந்து கிடப்பதால், காயும் வெம் பரல்போல் செல்லுகின்றார் தம் காலிடை
உறுத்துதல் கண்டான் - கொதிக்கின்ற கொடிய பருக்கைக் கற்களைப்போல்
நடக்கின்றவர்களுடைய கால்களில் உறுத்துதலைப் பார்த்தான்.
|