|
(வி - ம்.) நன்கு
இயற்றிய வில்இடு மகுடம் எனக் கூட்டுக. மறுகில் மேயின
அரசர் என்பது இடைப்பிறவரல் ஆகக் கொள்க. பொற்றகட்டாற் செய்து பலவகை
மணிகள் பதித்த கிரீடம். அது மற்றொன்றுடன் உரிஞம்போது மணிகள் உதிரும்.
அம்மணிகள் பருக்கைக் கற்கள்போற் கிடந்து நடப்பார் காலில் உறுத்தும் என்றார்.
இதனாற் செல்வச் சிறப்பு வாய்ந்த நகரம் துவாரகை என்பது விளங்கும்.
(251)
மாங்குயில் மருட்டும் மழலையங் கிளவி
மதர்த்தரி
படர்ந்துமை தோய்கண்
பூங்குழன் மடமா தர்களொடுங் கண்ணன்
பொன்னுல கோரழுக்
கறுப்பப்
பாங்குறப் புரியும் இன்பநற் கலவிப்
பகுப்பெலாங்
கைவலாற் கொண்டு
தேங்குமந் நகரார் தங்கண்மா ளிகைமுன்
சித்திரித்
திருப்பன கண்டான்.
(சொ - ள்.) மாங்குயில் மருட்டும் மழலைஅம் கிளவி மதர்த்து
அரிபடர்ந்துமை
தோங்கண்பூங்குழல் மடமாதர்ளொடும் மாமரத்திலுள்ள குயிலகளை மயங்கச் செய்கின்ற
இளங்குதலைச் சொல்லையும் செருக்கி வரிபரந்து மை தீட்டப்பட்ட கண்களையும்
மலரணிந்த கூந்தலையுமுடைய இளம் பெண்களுடன், கண்ணன் பொன் உலகோர்
அழுக்கறுப்பபாங்கு உறபுரியம் இன்பம்நல் கல்வி பகுப்பு எல்லாம் கைவலான்கொண்டு-
கண்ணபிரான், தேவலோகத்திலுள்ளவர்கள் பொறாமைப்படும்படி அழகுமிக இன்பத்தைத்
தரும்படி புரியம் நல்ல கலவி வகை எல்லாம் கைதேர்ந்தவனைக்கொண்டு, தேங்கும்
அநகரார் தங்கள் மாளிகை முன்சித்திரித்து இருப்பன கண்டான்-நிறைந்த அந்நகரத்திலுள்ள
வர்கள் தங்கள் மாளிகைகளில் சித்திரி்த்திருப்பதைக் கண்டான்.
(வி - ம்.) கண்ணன் இள மங்கையருடன் கலவிபுரிந்த வகைகளையெல்லாம்
கைவல்ல சித்திரக்காரரால் எழுதுவித்துச் செல்வர் வாழ்கின்ற மாளிகைகளைக் கண்டான்
; அச்சித்திரங்களைக் கண்டு தேவர்களும் பொறாமைப் பட்டனர் என்பது.
(252)
தரைமிசைக் கொடுங்கோல் நடவிய கஞ்சன்
சாளவ னேசிசு
பாலன்
வரைநிகர் தோட்கா லயவனன் ஆதி
மாற்றலர்ச்
செகுத்தபோர்க் கண்ணன்
|