|
ஐந்துதுந்
துபியின் முழக்கமும் மன்னர்
அவிர்கழ லொலியும்
வாம் பரியின்
நந்தலி லார்ப்புங் கந்தடு களிற்றின்
நரலலுந் தேரர
வமுஞ் சேர்ந்து
அந்தினி்ன் றெழுந்து விண்முக டுடைக்க
அளவில்பல்
வளத்தவாய்ப் பொலியுஞ்
சந்தமார் கண்ண பிரான்திருக் கோயில்
தனித்தலை வாயிலைச்
சார்ந்தான்.
(சொ - ள்.) ஐந்து துந்துபியின் முழக்கமும் மன்னர் அவிர்கழல்
ஓலியும் வாம்பரியின்
நந்தல் இ்ல் ஆர்ப்பும் - ஐவகை வாத்தியங்களின் பேரொலியும் அரசருடைய விளங்குகின்ற
வீரக்கழலின் ஒலியும் தாவுகின்ற குதிரையின் கேடில்லாத முழக்கமும், கந்துஅடு களிற்றின்
நரலலும் தேர்அரவமும் சேர்ந்து - கட்டுத்தறியை முறிக்கின்ற யானையின் முழக்கமும்
தேர்களின் ஒலியும் கூடி, அந்தில்நின்று எழுந்து விண்முகடு உடைக்க அளவுஇல்
பல்வளத்த ஆய்பொலியும் சந்தம்ஆர் கண்ணபிரான் திருக்கோயில் தனிதலை வாயிலை
சார்ந்தான் - அவ்விடத்திலிருந்து மேலெழுந்து விண்ணுலகத்தின் உச்சியைப் பிளக்க
அளவற்ற பல வளங்களை உடையவாய் விளங்குகிற அழகுநிறைந்த கண்ணபிரானது
சிறந்த அரண்மனையின் ஒப்பற்ற முதல்வாசலை அடைந்தான்.
(வி - ம்.) இது கண்ணன் அரண்மனைச் சிறப்புக் கூறிகின்றது. துந்துபி
ஒலி, பல
மன்னர்களின் வீரக்கழல் ஒலி, பரி முழக்கம், கரி முழக்கம், தேரொலி ஆகிய ஒலிகள்
நிரம்பியது. (257)
கண்டனன் தலைவா யிற்பெருஞ் சிறப்பைக்
கழியவும் உள்ளத்துத்
திகைப்புக்
கொண்டனன் அடங்கி லாஇறும் பூதுங்
கொண்டனன்
எண்ணிடு தற்கும்
விண்டசிற் றிடமு மின்றொரு கற்பம்
மேவிநாங் காத்திருந்
திடினுந்
தண்டலில் நெருக்கந் தவிர்ந்திடா துள்ளால்
சார்வதெவ்
வாறென நினைத்து.
(சொ - ள்.) கண்டனன் தலைவாயில் பெருஞ்சிறப்பை கழியவும் உள்ளத்து
திகைப்பு கொண்டனன் - தலைவாசலின்
|