|
பெருஞ்சிறப்பைப் பார்த்தான், மிகுதியும்
மனதில் திகைப்புற்றான், அடங்கிலா இறும்பூதும்
கொண்டனன் - அடக்கமுடியாத ஆச்சரியமும் அடைந்தான், எண் இடுதற்கும் விண்டசிறு
இடமும் இன்று - எள்ளினையிடுவதற்கும் பிளவுபட்ட சிறிய இடமும் இல்லை, ஒரு
கற்பம்மேவி நாம் காத்திருந்திடினும் தண்டல்இல் நெருக்கம் தவிர்ந்திடாது - ஒரு
கற்பம் என்ற காலம்வரையும் நாம் காத்திருந்தாலும் நீங்காத கூட்டத்தின் நெருக்கம்
குறையாது, உள்சார்வது எவ்வாறு என நினைந்து - இவ்வரண்மனையின் உள்ளே நாம்
போவது எவ்வாறு என்று நினைத்து.
(வி - ம்.) தலைவாயிற் சிறப்புக்கண்ட குசேலன் மனந்திகைத்தான்
; எவ்வாறு
உள் நுழைவது என்று எண்ணினான். பின் துணிந்தான் என்பது அடுத்த கவியிற்
கூறுகிறார், (258)
கன்னல்பல் கழிதல் கண்டுபா ணித்தல்
காரியம் அன்றினித்
துணிந்திம்
மன்னிய நெருக்கிற் புகுந்திடின் நமக்கு
வருவன வருகவென்
றோர்ந்து
துன்னினான் அங்கோ ரரசனைச் சூழ்ந்த
சுடர்ந்தகஞ்
சுகப்படி வுடையார்
மின்னிய வாளாற் பற்பலர் துரப்ப
வெரீஇயினான்
சேயிடை யகன்றான்.
(சொ - ள்.) கன்னல்பல் கழிதல்கண்டு பாணித்தல் காரியம் அன்று
இனிதுணிந்து
- நாழிகை பல கடத்தலைப் பார்த்துத் தங்கியிருத்தல் இப்பொழுது காரியமல்ல என்று
துணிவுகொண்டு, இ மன்னிய நெருக்கில் புகுந்திடில் நமக்கு வருவன வருகவென்று
ஓர்ந்து துன்னினான் - இங்ஙனம் பொருந்திய நெருக்கடியில் நுழைந்தால் வரக்கூடியது
வரட்டும் என்று ஆராய்ந்து நெருங்கினான்; அங்குஓர் அரசனை சூழ்ந்த சுடர்ந்த
கஞ்சுகம் படியார் மின்னிய வாளால் பற்பலர் துரப்ப வெரீஇயினான் சேயிடை அகன்றான்
- அங்கு அரசன் ஒருவனைச் சூழ்ந்துள்ள ஒளி வீசுகின்ற மெய்ப்பையணிந்த உடம்பினை
உடைய காவலர் மின்னுகின்ற வாள்களாற் பலரைத் துரத்த (அதுகண்டு) அச்சமுற்றுத்
தொலைவிடத்து ஏகினான்.
(வி - ம்) கஞ்சுகப் படிவுடையார் என்பது அரசன் மெய்காப்பாளர்
எனக் கொள்க
. கஞ்சுகம் சட்டை மெய்ப்பை என்று கூறுவர் முன்னோர். வாளாயுதத்தைச் சுழற்றி
வீசிக் காவலர் அரசனைச் சுற்றி மற்றையோர் நெருங்காதபடி காத்துப் போவது
|