பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்209


கண்டு குசேலன் அஞ்சியோடினன், மறையோன் ஆதலால் அச்சமுற்றான் என்பது
குறிப்பு, கன்னல் - நாழிகை. பாணித்தல் - தாமதித்தல்.                (259)

     மீட்டுமுள் துணியா அணிகொளாங் கொருசார்
          மென்மெல மேவினன் ஆங்குத்
     தாட்டுணை பணிந்து கண்ணனுக் களக்குந்
          தயங்குசெம் பொற்பொதி குவித்த
     மோட்டிடம் அதனாற் காவலர் பலரும்
          முடுக்கினார் வாளுறை கழித்துத்
     தீட்டரும் புகழோன் என்செய்வான் நடுங்கித்
          தியங்கியோட் டம்பிடித் துய்ந்தான்.

   (சொ - ள்.) மீட்டும் உள்துணியா அணிகொள் ஆங்கு ஒருசார் மெல் மெல
மேவினன் - திரும்பவும் மனந் துணிந்து அழகைக்கொண்ட அவ்விடத்தில் ஒரு பக்கம்
மெல்ல மெல்லப் போனான், ஆங்கு தாள் துணை பணிந்து கண்ணனுக்கு அளக்கும்
தயங்கு செம்பொன் பொதிகுவித்த மோட்டிடம் அதனால் காவலர் பலரும் வாள் உறை
கழித்து முடுக்கினார் - இரண்டு திருவடிகளையும் வணங்கிக் கண்ணபிரானுக்குத் திறையாக
அளக்கவேண்டிய விளங்குகிற செம்பொன் நிறைந்த பொதிகள் தங்கும் பெரிய இடமாக
இருந்ததால் காவலர் பலரும் வாளாயுதத்தை உறையினின்றும் எடுத்து ஓங்கித் துரத்தினர்,
தீட்டு அருபுகழோன் என் செய்வான் நடுங்கி தியங்கி ஓட்டம் பிடித்து உய்ந்தான் -
எழுதற்கரிய புகழையுடையவனாகிய குசேலன் இன்ன செய்வதென்றறியாமல் நடுக்கமுற்று
ஓடித் தப்பினான்.

   (வி - ம்) வாளாயுதத்தை உறையினின்றும் எடுத்துக் காட்டித் துரத்தினபோது
குசேலன் அஞ்சி நீண்ட தூரம் ஓடிப் பிழைக்கக் கருதினான் என்று கொள்க. உய்ந்தான்
என்பது தான் பிழைத்ததாகக் கருதினான் என்ற பொருளைத் தந்தது. துணியா -
துணிந்து ; செய்யா என்ற வாய்ப்பாட்டு வினையெச்சம் மோ+இடம் மோட்டிடம் -
பெருமையாகிய இடம். மோடு. பெருமை.                             (260)

     பின்னரெங் ஙனம்யாம் புகுவதென் றுளத்துப்
          பெரிதுமா ராய்ந்துநின் றிடும்போ
     துன்னருங் கடவுட் கண்ணன தருள்போல்
          ஓவருந் தானைதற் சூழ