|
மன்னனாங்
கொருவன் அடைந்தனன் கண்டான்
மற்றவன் சேனையுட்
புகுந்தான்
பன்னரும் வருத்தம் உடங்குறல் யாவும்
பரித்தனன்
மென்மெல நடந்தான்.
(சொ - ள்.) பின்னர் எங்ஙனம் யாம் புகுவது என்று உளத்து பெரிதும்
ஆராய்ந்து
நின்றிடு போது - பின்பு நாம் எவ்வாறு உள்ளே நுழைவது என்று மனத்தில் ஆராய்ந்து
நின்று கொண்டிருந்த பொழுது, உன் அரு கடவுள் கண்ணனது அருள் போல் ஓவு
அருதானை தன் சூழ ஆங்கு மன்னன் ஒருவன் அடைந்தனன் கண்டான் -
நினைத்தற்கரிய கடவுளாகிய கண்ணபிரான் திருவருளைப்போல, நீ்ங்காத படை தன்னை
ச் சூழ்ந்துவர அவ்விடத்தில் அரசன் ஒருவன் சேர்ந்தான், அதனைக் கண்டு, மற்றவன்
சேனையுள் புகுந்தான் பன் அரு வருத்தம் உடங்குறல் யாவும் பரித்தனன்மெல் மெல
நடந்தான் - அவ்வரசன் படையினருள்ளே புகுந்து சொல்லுதற்கரிய துன்பத்தோடு
நெருக்குதலையும் பொறுத்துக் கொண்டு பையப்பைய நடந்தான்.
(வி - ம்.) கண்ணன் அருள் போல என்ற உவமையை அம் மன்னன் வந்தது
கண்ணன் அருள் கிடைத்தது போல எனவும், கண்ணன் அருள் பெற்றவர் போலக்
குசேலன் மன்னவன் சேனையுட புகுந்தான் எனவும் இருவகைக் கொள்ளலாம். கண்டான்,
புகுந்தான், பரித்தனன், நடந்தான் என்று வினைமுற்றுக்களின் முன் நின்ற மூன்றையும்
எச்சமாக்கி நடந்தான் என்று முடிக்க. (261)
நெருக்கினுட் படலால் உடலரை பட்டு
நீளிடைக் கானிலத்
துறாமல்
வெருக்கொளச் சென்றுங் கரங்கள்மே லெடுத்தும்
விடாதுகை இடிப்புண்டும்
வளைந்தும்
பெருக்குறு வெயரின் மூழ்கியும் இரண்டாம்
பிறப்பிது நமக்கென
உணர்ந்து
திருக்கிளர் துவார பாலர்நிற் கின்ற
செவ்விய இடத்தினை
யடைந்தான்.
(சொ - ள்.) நெருக்கினுள் படலால் உடல் அரைபட்டும் நீள் இடை
கால் நிலத்து
உறாமல் வெருகொள சென்றும் - நெருக்கத்தினுள் அகப்பட்டதால் உடம்பு தேய்க்கப்
பெற்றும் நீண்ட வழியில் அடிகள் நிலத்தில் படாமலும் பயமடைந்து நடந்தும், கரங்கள்
மேல் எடுத்தும் விடாது கை இடிப்புண்டும்
|