பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்211


வளைந்தும் பெருக்கு உறு வெயரில் மூழ்கியும் - கைகளை மேலே உயர்த்தியும்
நீங்காமல் கை தாக்கப் பட்டும் வளைவுற்றும் பெருகுகின்ற வியர்வை நீரில் குளித்தும்,
இரண்டு ஆம் பிறப்பு இது நமக்கு என உணர்ந்து திருகிளர் துவாரபாலர் நிற்கின்ற
இடத்தினை அடைந்தான் - நமக்கு இப்பொழுது இரண்டாவது பிறவி கிடைத்துள்ளது
என்று (நாம் நெருக்கடியில் தப்பிப் பிழைத்தது தெய்வத் திருவருள் என்று) தெரிந்து
அழகு விளங்குகின்ற வாயில் காப்பாளர் நிற்கும் செம்மையான இடத்தை அடைந்தான்.

   (வி - ம்.) அச்சத்தாற் கால்கள் நிலத்தில் வையாமல் விரைந்து சென்றார் எனவும்,
உடம்பு இடிபட்டுக் கையை மேலே உயர்த்தியும் கைகள் இடிக்கப்பட்டும் வியர்வை
ஒழுகியும் நெருக்கத்தால் வருத்தமுற்றுச் சென்றார் எனவும் கொள்க. நெருக்கிலகப்பட்ட
போது உயிர் போனது போலவும் வாயிற் காவலரிடம் வந்தபோது தான் உயிர் வந்தது
போலவும் கருகினான் என்பது கருத்து.                                (262)

     நெடியவன் அடியா ரிவரென எவரும்
          நிகழ்த்திடத் தகுமடை யாளம்
     படியறப் புனைந்து பொலிவுறுந் துவார
          பாலரைக் கண்டனன் மகிழ்ந்தான்
     மடிவில்வை ணவசி காமணி களாகும்
          மற்றிவர் வைகுந்தத் துறையுங்
     கடிதலில் சயவி சயர்களே இவரைக்
          கடுப்பவர் இலரென நினைந்தான்.

   (சொ - ள்.) நெடியன் அடியார் இவர் என எவரும் நிகழ்த்திட தகும் அடையாளம்
படி அற புனைந்து பொலிவுறு துவாரபாலரை கண்டனன் மகிழ்ந்தான் - நீண்ட பெருமை
யுடைய திருமாலின் அன்பர் இவர் என்று சொல்லத் தக்கபடி அடையாளங்களை
நிகரில்லா வண்ணம் பூண்டு விளங்குகின்ற வாயிற் காவலரைக் கண்டு மகிழ்ச்சியுற்றான்,
மடிவுஇல் வைணவ சிகாமணிகள் ஆகும் மற்று இவர் வைகுந்தத்து உறையும் கடிதல் இல்
சய விசயர்களே இவரை கடுப்பவர் இவர் என நினைத்தான் - கேடில்லாத
வைணவ முதல்வர்களே ஆவர், இவர்கள் வைகுந்தத்தில் தங்கி இருக்கின்ற சய
விசயர்களே இவருக்கு ஒப்பானவர் எவரும் இலர் என்று குசேலன் நினைத்தான்.

   (வி - ம்.) அடையாளம் ஆவன, திருமண்ணிடுதல் தாமரை மணிமாலை, துளசிமாலை
புனைதல் முதலியன. இவை வைணவச்