|
சின்னம் ஆகும். வைகுந்தத்தில் இருக்கும்
துவார பாலகருக்கு சயன். விசயன் என்பன
பெயர்கள். கடுப்பவர் - ஒப்பவர், போன்றவர். (263)
முகத்திடை நீண்ட உரோமமிக் கவனெண்
முடிதற்கும் இடமற
யாரும்
நகத்தகு பற்பல் துளையுடைக் கந்தை
நயந்துகொண்
டவன்மதிப் பிலாமை
மிகத்தரும் யாக்கை யுடையவன் துவாரம்
மேவுமப் பாலர்முன்
குறுகி
இகத்தலில் குணத்தீர் கேட்டருள் வீரென்
றியம்புறத்
தொடங்கினன் அன்றே.
(சொ - ள்.) முகத்திடை நீண்ட உரோம மிக்கவன் எண் முடிதற்கும்
இடம் அற
யாரும் நகத்தரு பற்பல் துளையுடை கந்தை நயந்துகொண்டவன் மதிப்பு இல்லாமை
மிகத் தரும் யாக்கை உடையவன் - முகத்தில் நீண்டிருக்கின்ற, மயிர் மிகுதி உடையவனும்
எள்ளி முடிவதற்கும் இடமில்லாதபடி எவரும் சிரிக்கத் தக்க பல துளைகளையுடைய
கந்தைத்துணியை விரும்பி அணிந்துகொண்டிருப்பவனும் சிறப்பின்மையை மிகவும்
தரும் உடம்பை உடையவனும் (ஆகிய குசேலன்), துவாரம் மேவும் அ பாலர் முன்
குறுகி - வாயிலில் நிற்கும் அக்காவலர் முன் அணுகி, இகத்தல் இல் குணத்தீர்
கேட்டருள்வீர் என்று இயம்புற தொடங்கினன் - நீக்கப்படாத நற்குண முடையவர்களே
நான் சொல்லுகின்றவற்றைக் கேட்டருள்வீர் என்று கூறிச் சொல்லத் தொடங்கினான்.
அன்று, ஏ : அசைகள்.
(வி - ம்.) அத் துவாரபாலகரிடம் சென்று கூறுவதற்கும் அவ்,ரகள்
கேட்பதற்கும்
தகுதியில்லாதது குசேலனது தோற்றம் என்பதை ஆசிரியர் முன்னிரண்டடிகளில்
விளக்கினர். கேட்டரருள்வீர் என்று வேண்டினன் குசேலன் என்றது அவன் எளிமையை
விளக்கியது. (264)
அறுசீரடி
ஆசிரிய விருத்தம்
மக்களுள் மிக்கீர் நீல
வண்ணனுக் கடியீர்
தூய்தாத்
தொக்கபுண் ணியத்தீர் பாவந்
தொலைத்தமா
தவருஞ் செய்ய
|