|
நக்கபூங்
கமலத் தோனும்
நண்ணரும் புகழ்பெற்
றுள்ளீர்
எக்கலை களினும் வல்லீர்
இயம்புமென்
ஆசி கொண்மின்.
(சொ - ள்.) மக்களுள் மிக்கீர் நீலவண்ணனுக்கு அடியீர் தூய்து
ஆ தொக்க
புண்ணியத்தீர் - மனிதரில் சிறந்தவர்களே நீலநிறமுடைய கண்ணனின் அடியார்களே
துய்மையாகச் சேர்ந்த புண்ணியம் உடையவர்களே, பாவந் தொலைத்த மாதவரும்
செய்ய நக்க பூ கமலத்தோனும் நண் அரும் புகழ்பெற்றுள்ளீர் - குற்றத்தைக் கெடுத்த
மாபெரு முனிவர்களும் சிவந்த விளங்குகின்ற தாமரை மலரில் தங்கியிருக்கின்ற
நான்முகனும் அடைதற்கரிய புகழைப் பெற்றுள்ளவர்களே, எக்கலைகளினும் வல்லீர்
இயம்பும் என் ஆசி கொள்மின் - எல்லாக் கலைகளினும் திறமையுள்ளவர்களே நான்
சொல்லுகின்ற நல்லுரையைக் கேளுங்கள்.
(வி - ம்.) திருமாலடியார்கள் எவராயினும் அவரைத் திருமாலைக்
கண்டது
போலவே போற்றுவதும் புகழ்வதும் வைணவ மரபு ஆதலால் வாயிற் காவலரை இங்ஙனம்
உயர்த்திப் புகழ்ந்தான் எனக் கொள்க. அன்றியும் அக் காவலர் தயவினால் தான்
கண்ணனைக் காண முடியும் என்பது கருதியும் புகழ்ந்தான் எனவுங் கொள்க. (265)
உங்களை நோக்குந் தோறும்
உவரியும் வெஃகும்
மேனிச்
செங்கண்மால் தனைக்கண் டாங்குச்
செறிந்திடும்
உவகை யந்தக்
கொங்கவிழ் கமலச் சேக்கைக்
கோமள வல்லி
மார்பன்
துங்கநற் சேவை யாற்றித்
தூயரா தலினால்
அன்றே.
(சொ - ள்.) உங்களை நோக்கும்தோறும் உவரியும் வெஃகும் மேனி
செம் கண்
மால்தனை கண்டாங்கு உவகை செறிந்திடும் - உங்களைப் பார்க்கும் பொழுதெல்லாம்
கடலும் விரும்பும் மேனியையுடைய செந்தாமரை மலர் போன்ற கண்களையுடைய
திருமாலைப் பார்த்தது போல மகிழ்ச்சி நிறைந்திடும், அந்த கொங்கு அவிழ் கமலம்
சேக்கை கோமளம் வல்லி மார்பன் துங்கம் நல்சேவை ஆற்றி தூயர் ஆதலினால்
அன்றே -அந்த மணம் வீசுகின்ற தாமரை மலரில் தங்கியுள்ள அழகிய கொடி போல்
|