|
(சொ - ள்.) வச்சிரம்
தடம்கை வாசவன் ஏவ மஞ்சு இனம் பொழிந்த கல்மழையை
நச்சும் விண் உரிஞ்சும் போகு உயர் குவடு ஒர் நாகம் ஏந்தி - வச்சிரப் படையைத்
தாங்கும் பெரியகையையுடைய இந்திரன் ஏவுதலால் மேகக் கூட்டங்கள் சொரிந்த
கல்மழையை விரும்பப்படும் ஆகாயத்தை உராயும் சிகரத்தையுடைய ஒரு மலையைக்
குடையாகத் தாங்கி, தடுத்தருளும் அச் சுதன்பால் சென்று ஏழையேன் வருகை அறிவித்து
என்தனை அவண் சேர்த்தல்-அம்மழையைத் தடுத்துக் காத்தருளும் கண்ணபிரானிடம்
ஏழையாகிய எனது வரவைத் தெரிவித்து என்னை அவ்விடம் சேர்ப்பித்தல், மெச்சும்
நும் கடன் என்று எவரும் விரும்புறு குசேலன் மாதவன் உரைத்தனன் - புகழப்படுகின்ற
நும்முடைய கடமையாம் என்று யாவரும் விரும்புகின்ற குசேலனாகிய பெரிய முனிவன்
சொன்னான்.
(வி - ம்.) கண்ணன் கல்மழையைத் தடுத்துக்காத்த வரலாறு பாகவதத்தில்
விரிவாகக்
காணலாம். அதன் சுருக்கம்: கண்ணன் இளமையில் ஆனிரை மேய்த்துப் பல அற்புதம்
நிகழ்த்தினன். ஆயர் யாரும் கண்ணனைத் தெய்வப் பிறப்பெனவே சிந்தித்துக்
கொண்டாடினர். ஒருநாள் கண்ணன் இந்திரனுக்குப் பொங்கலிட்டுக் கோவர்த்தனம் என்ற
மலையடியிற் கோவலர் இந்திர விழாக் கொண்டாடத் தொடங்கியபோது அதனைத்
தடுத்துக் தனக்கு விழா நடத்துமாறு கூறினன். சிலர் அவன் கூறிய சொற்படியே அவனைக்
குறித்தே பொங்கலிட்டுக் கொண்டாடினர். அதனாற் சினந்து இந்திரன் கல்மழை பெய்யுமாறு
மேகங்களை யேவினான். கல்மழை பெய்யக்கண்ட கோவலர் அனைவரும் கண்ணனிடம்
கூறி 'எங்கள் குடி இன்றோடு தொலையும்' என்று வருந்தினர். அதனைக் கண்ட
கண்ணன் அம்மலையைக் கையிற் குடையாக ஏந்தி நிற்க அதனடியில் ஆனிரையும்
ஆயரும் சென்று தங்கி உயிர் பெற்றனர். இந்திரனால் ஒன்றுஞ் செய்ய வியலாது
மழையை நிறுத்தினன்.
(269)
இன்னணம் வாயில் காப்பவர் தம்மோ
டீங்கிவன் புகல்மொழி
கேளா
அன்னவர் பக்க லுறுஞ்சிலர் மடமை
யாலட ரப்படும்
மனத்தார்
உன்னரு மறைநன் கோர்ந்தஇக் குசேலன்
ஒளிர்முகத்
திணைவிழி பரப்பிப்
பன்னரும் இழிசொற் புகலலுற் றாராற்
பரவைசூ ழுலகெலாம்
புரப்போய் !
|