பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்217


   (சொ - ள்.) இன்னணம் வாயில் காப்பவர் தம்மோடு ஈங்கு இவன் புகல்மொழி
கேளா-இங்ஙனம் வாயில் காப்பாளரிடத்தில் இவ்விடத்தில் இக்குசேலன் சொல்லிய
சொற்களைக் கேட்டு, அன்னவர் பக்கம் உறும் சிலர் மடமையால் அடரப்படும் மனத்
தார் - அத்துவார பாலகர் பக்கத்தில் பொருந்திய சிலர் அறிவீனத்தால் நெருக்கப்பட்ட
மன முள்ளவர்கள், உன்ன அருமறை நன்கு உணர்ந்த இக்குசேலன் - நினைப்பதற்கு
அருமையான வேதங்களை நன்றாகக் கற்றுணர்ந்த இக்குசேலரது, ஒளிர் முகத்து இணை
விழி பரப்பிப் பன் அரும் இழிசொல் புகலல் உற்றார் - விளங்குகின்ற முகத்திலே
இரண்டு கண்களையும் பரவச்செய்து சொல்லற்கரிய தாழ்ந்த சொற்களைச்
சொல்லலானார்கள், பரவை சூழ் உலகு எலாம் புரப்போய்-கடல் சூழ்ந்த பூமி முழுவதும்
காக்கும் (பரீட்சித்து) மன்னனே.

   (வி - ம்.) பரவை...... புரப்போய் : இது பரீட்சித்துவைச் சுக முனிவன் விளித்தது.
இடையிடையே இவ்வாறு வருவன காண்க. துவார பாலகர் பக்கத்து நின்ற சிலர்
குசேலனுக்குக் கூறுவது அடியில் வருவன அவை இழிவாகிய சொற்கள் என இங்குக்
கூறினர்.                                                    (270)

               அறுசீரடி யாசிரிய விருத்தம்
     வகுத்தபல் லுலகும் போற்ற
          மாற்றலர் கூற்றூர் மேவச்
     செகுத்தர சாளுங் கண்ணச்
          செம்மலெங் கேநீ எங்கே
     இகுத்தபல் துவாரக் கந்தை
          ஏழைப்பார்ப் பானே சற்றும்
     பகுத்தறிந் திடலற் றாய்கொல்
          பயனில்மூப் படைந்தாய் போலும்.

   (சொ - ள்.) வகுத்த பல் உலகும் போற்ற மாற்றலர் கூற்று ஊர் மேவ செகுத்து
அரசு ஆளும் கண்ணன் செம்மல் எங்கே - படைக்கப்பெற்ற பல உலகத்தாரும்
புகழும்படி பகைவரை எமனுலகம் சேரும்படி அழித்து அரசு புரிகின்ற கண்ணனாகிய
சிறந்தவன் எங்கே ?, இகுத்த பல் துவாரம் கந்தை ஏழை பார்ப்பானே நீ எங்கே -
கிழிந்த பலவாகிய துளைகளையுடைய கந்தைத் துணியை உடுத்தியிருக்கின்ற ஏழைப்
பார்ப்பானாகிய நீ எங்கே, சற்றும் பகுத்து அறிந்திடல் அற்றாய் கொல் பயன் இல்
மூப்பு அடைந்தாய் போலும் - சிறிதும் பிரித்து உணரும் அறிவு கெட்