பக்கம் எண் :

218 குசேலோபாக்கியானம்

டனையோ பயனற்ற முதுமைப் பருவத்தை அடைந்துள்ளாய் போலும்.    

   (வி - ம்.) எங்கே என்பது குறிப்புச் சொல், கண்ணன் இருக்கும் பதவி எவ்வளவு
உயர்ந்தது, நீ நிற்கும் நிலை எவ்வளவு இழிந்தது என்பதையுணர்த்தியது. அறிவின்றி
மூப்படைந் தனையோ ? அறிவில்லா மூப்பு அது ; பயனற்ற மூப்பு, மூத்தும் அறிவு
முதிரவில்லை என்று இகழ்ந்தனர். உலகியலறிவு உனக்குச் சிறிதும் இல்லை என்பதை
எங்கே என்ற குறிப்பால் உணர்த்தினர்.

     மின்மைசெய் பகைஞர் மோலி
          மிதித்திடு கழற்காற் கண்ணன்
     தன்மையும் ஏழை யாம்நின்
          தன்மையுந் தெரிந்து நோக்கில்
     வன்மைசெய் புழைக்கை மாவும்
          மசகமும் போலும் வாரிக்
     கொன்மைசெய் நீரும் ஆவின்
          குளப்படி நீரும் போலும்.

   (சொ - ள்.) மின்மை செய்பகைஞர் மோலி மிதித்திடு கழல்கால் கண்ணன்
தன்மையும் - மின்னலைச் செய்கின்ற பகைவர்களுடைய மகுடத்தை உதைத்திடும்
வீரகண்டை அணிந்த கண்ணபிரானுடைய இயல்பும், ஏழை ஆம் நின் தன்மையும்
தெரிந்து நோக்கில் - எளியவனாயிருக்கின்ற உன்னுடையஇயல்பும் ஆராய்ந்து பார்த்தால்;
வன்மைசெய் புழைக்கை மாவும் மசகமும் போலும் - வலிமையைக் செய்கின்ற
தும்பிக்கையையுடைய யானையும் கொசுவும் போன்றிருக்கும், வாரி கொன்மைசெய்
நீரும் மாவின் குளம்பு அடிநீரும் போலும் - கடலின் மிகுதியாயிருக்கின்ற நீரையும்
விலங்கின் காற்குளம்பின் அடியில் தங்கியுள்ள நீரையும் போன்றிருக்கும்.

   (வி - ம்.) மதயானையும் மசகமும், கடனீரும் விலங்கின் காற்குளம்படி நீரும்
பெருமை சிறுமைக்கு உவமைகள், ஏற்றம் தாழ்வு அறியாது வந்ததால் அறிவிலி எனக்
குறிப்பாக இகழ்ந்தனர் எனக் கொள்க. பகைஞர் மோலி மிதித்திடு கழற்கால் எனக்
கண்ணனுக்கு உயர்வு காட்டினர்.                           (272)

     கனகமால் வரையும் மண்ணங்
          கட்டியும் போலுஞ் செங்கேழ்த்
     தினகர வொளியும் ஓர்கத்
          தியோதத்தின் ஒளியும் போலும்