|
அனகமார்
தருவும் புன்சீழ்
கம்புலும் போலுஞ்
சேடப்
பனகமுஞ் சிறுநாங் கூழும்
போலும்பாய்
மிடிப்பார்ப் பானே.
(சொ - ள்.) கனகம் மால் வரையும் மண் அம் கட்டியும் போலும்
- பொன்னாலாகிய
பெரிய மலையும் (சிறிய) மண் கட்டியும் போலவும், செம்கேழ் தினகரன் ஒளியும் ஓர்
கத்தியோதத்தின் ஒளியும் போலும் - சிவந்த நிறமுடைய பகலவனின் ஒளியும் ஒரு
மின்மினிப் பூச்சியின் ஒளியும் போலும், அனகம் ஆர் தருவும் புன் சீழ் கம்புலும்
போலும் - குற்றமற்ற கற்பக தருவையும் அற்பமான சிறிய புல்லையும் போன்றிருக்கும்,
சேடன் பனகமும் சிறு நாங்கூழும் போலும் - ஆதிசேடனாகிய பாம்மையும் சிறிய நாங்
கூழ்ப் பூச்சியையும் போன்றிருக்கும், பாய் மிடி பார்ப்பானே - படிவிய வறுமையையுடைய
பார்ப்பானே.
(வி-ம்.) பொன்மலை-மண்ணாங்கட்டி, சூரியன்-மின்மினி, கற்பக
தரு-சீழ்கம்புல்,
சேடன்-நாங்கூழ்ப்புழு என ஏற்றத் தாழ்வுக்கு உவமை பல எடுத்துக்காட்டினர். இவற்றை
முறையே வடிவத்திற்கும், புகழுக்கும் கொடைக்கும் வலிமைக்கும் உயர்வு தாழ்வுக்குத்
தக்க உவமைகள் எனக் கொள்க. சீழ்கம்புல் - புல்லில் ஒருவகை. கத்தியோதம்-
மின்மினி. பார்ப்பானே என்பதும் பாய்மிடி என்பதும் குலத்தையும் வறுமையையும்
இழித்துக் கூறியாதாகக் கொள்க. (273)
பொருள்நனி யுளனென் றியாரும்
புகலுமோர் வார்த்தை
வேண்டும்
இருகையுங் கடகம் வேண்டும்
இலங்குகுண் டலங்கள்
வேண்டும்
வருவிர லாழி வேண்டும்
மார்பிடை மதாணி
வேண்டும்
உருவமுத் தாரம் வேண்டும்
உயர்ந்தபட்
டாடை வேண்டும்.
(சொ - ள்.) பொருள் நனி உளன் என்று யாரும் புகலும் ஓர் வார்த்தை
வேண்டும்
- செல்வம் மிகுதியும் உடையவனாயிருக்கின்றான் என்று யாவரும் சொல்லும் ஒரு
புகழுரை வேண்டும், இருகையும் கடகம் வேண்டும் இலங்கு குண்டலங்கள் வேண்டும்
- இரண்டு கைகளிலும் காப்புகள் அணிந்திருக்கவேண்டும் விளங்குகின்ற காதணிகள்
வேண்டும், வருவிரல் ஆழிவேண்டும் மார்பிடை
|