பக்கம் எண் :

220 குசேலோபாக்கியானம்

மதாணி வேண்டும் - வளர்ந்துவரும் விரல்களுக்குக் கணையாழிகள் வேண்டும் மார்பில்
பதக்கம் வேண்டும், உருவம் முத்து ஆரம் வேண்டும் உயர்ந்த பட்டு ஆடை வேண்டும்
- அழகிய முத்துமாலை வேண்டும் சிறந்த பட்டு உடை வேண்டும்.

   (வி - ம்.) "அரசவை குறுகு வார்க்கு" என்று அடுத்த கவியின் இறுதியிலுள்ள
சொற்றொடரை முதலில் வைத்து இக் கவிக்கும் பொருள் கூறல் வேண்டும். மன்னரைக்
காணவருவோர்க்கு இத்தகைய சிறப்புக்கள் வேண்டும். அவை இன்றி வந்தனையே
இது அறிவின்மைதான் என்று குறிப்பாயிகழ்ந்தனர்.                  (274)

     சிவிகைமுன் ஊர்தி வேண்டுஞ்
          செழும்பொருட் செலவு வேண்டுங்
     குவிகையே வலரும் வேண்டுங்
          கோலமார்ந் திருக்க வேண்டும்
     கவிதைதாங் குநரும் வேண்டுங்
          கையுறை சிறப்ப வேண்டும்
     அவிகையில் விளக்கம் வேண்டும்
          அரசவை குறுகு வார்க்கே.

   (சொ - ள்.) சிவிகை மன் ஊர்திவேண்டும் செழும் பொருள் செலவு வேண்டும்
- பல்லக்கு முதலிய வாகனங்கள் வேண்டும் மிக்க செல்வத்தைச் செலவு செய்யும்
இயற்கை வேண்டும், குவிகை ஏவலரும் வேண்டும் கோலம் ஆர்ந்து இருக்க வேண்டும்
- குவித்த கைகளையுடைய ஏவலாளர்களும் வேண்டும், அழகு நிறைந்திருத்தல் வேண்டும்,
கவிகை தாங்குநரும் வேண்டும் கையுறை சிறப்ப வேண்டும் - குடைபிடிக்கின்றவரும்
வேண்டும் காணிக்கைப் பொருள் சிறக்கும்படி வேண்டும், அவிகை இல் விளக்கம்
வேண்டும் அரசு அவை குறுகு வார்க்கே - அழிதலில்லாத விளக்கம் வேண்டும்
அரசவை அடைகின்றவர்க்கு.

   (வி - ம்.) மற்றுஞ் சில சிறந்த பொருள்கள் வேண்டும் மன்னரவை செல்வோர்க்கு,
என்று இக்கவியிற் கூறினர். குவிகை - கை குவிக்கும். கையுறை - கையில் உறைந்திருப்பது
என்று பொருள் தரும். பெரியோரைக் காணச் செல்வோர் ஏதேனும் உயர்ந்த ஒரு
பொருள் கையிற்கொண்டு செல்வர். அதனை இக்காலத்தார் "காணிக்கை" என்பர்.
எலுமிச்சம் பழம் போன்ற உயர்,நத பொருள் என அறிக. அவிகை - அவிதல்: இது
தொழிற் பெயர்; கை: விகுதி: நடக்கை வருகை என்பன போன்றது.