|
சிறப்புறச்
செல்வ ராகிற்
சிறப்புறு முகமன்
செய்வர்
பெறப்படும் மிடிய ராகிற்
பிடர்பிடித்
துந்து வார்கள்
வறப்பிலுன் முன்னாள் நட்பை
மறந்திடா திருக்கின்
றான்கொல்
இறப்பநேற் றுண்ட கூற்றை
இன்றுயாம் மறப்ப
மாகில்.
(சொ - ள்.) சிறப்புஉற செல்வர் ஆகில் சிறப்புறு முகமன் செய்வர்
- மேற்கூறிய
சிறப்புடன் பொருந்தச் செல்வார்களாயின் சிறப்பமைந்த இன்மொழி கூறுவர்; பெறப்படும்
மிடியர் ஆகில் பிடர்பிடித்து உந்துவார்கள் - பெறக்கூடிய வறியரானால் பிடரியைப்
பற்றித் தள்ளுவார்கள்; வறப்பு இல் முன்நாள் நட்பை மறந்திடாது இருக்கின்றான்கொல்
- குறைவில்லாத பழையநாட் செய்துகொண்ட உறவை மறந்துவிடாமல் இருக்கின்றானோ;
இறப்ப நேற்று உண்ட கூற்றை இன்றுயாம் மறப்பம் ஆகில் - மிகுதியாக முந்தின
நாளில் உட்கொண்ட உணவின் பகுதியை இன்றைக்கு நாம் மறப்போமானால்.
(வி - ம்.) சிறப்புஉற என்பதற்கு மேற்கூறிய இரு கவிகளிலும் கூறிய
சிறப்புக்கள்
பலவும் பொருந்த என்று வருவித்துக்கொள்க. கொல்; ஐயப்பொருளில் வந்தது யாம்
நேற்று உண்ட உணவின் கூற்றையும் மறந்துவிடுகிறோம் என்றால் அரசன் இளமையில்
நட்புக்கொண்டதை இன்னமும் மறவா திருப்பனோ? மறந்தேயிருப்பான் என்பது குறிப்பு
(276)
இலகுமோர் நகரச் செல்வ
ரிடத்தினுஞ்
செல்வர் நட்பே
நிலவுற நிற்கும் ஏழை
நீர்மையர்
நட்பு நில்லா
தலகில்செல் வத்த னாகி
அரசர்யா வருந்தற்
போற்ற
மலர்தலை யுலகங் காக்கும்
மன்னன்மாட்
டுன்னட் பெற்றே.
(சொ - ள்.) இலகும் ஒர் நகரச் செல்வர் இடத்தினும் செல்வர்நட்பே
நிலவுற
நிற்கும் - விளங்குகின்ற ஒரு நகரத்தி
|