பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்23


                    அறுசீரடி ஆசிரிய விருத்தம்

     பார்புகழுங் குசேலமுனி சரிதமதைத்
          தமிழ்ப்பாவிற் பகர்ந்தான் தூய
     நீர்தவழும் நெடுஞ்சடிலச் சிவபிரான்
          பதயுகளம் நிலவும் நெஞ்சன்
     கார்பொலியுஞ் சோலைபுடை யுடுத்தொளிர்வல்
          லூராளி கவிஞர் போற்றுஞ்
     சீர்திகழுங் கருணீகர் குலத்துதித்த
          தேவரா சேந்த்ரன் மன்னோ.

   (சொ - ள்.) தூய நீர்தவழும் நெடு சடிலம் சிவபிரான் பத யுகளம் நிலவும்
நெஞ்சன் - தூய்மையுடைய கங்கை யாகிய நீரானது தவழப்பெற்ற நெடிய சடை
முடியையுடைய சிவபெருமானின் திருவடிகளை நிலைபெற நினையுமனத்தினன்; கார்
பொலியும் சோலை புடை உடுத்து ஒளிர் வல்லூர் ஆளி - மேகங்கள் அழகுறப்படியும்
சோலைகளைப் பக்கங்களில் சூழப் பெற்று விளங்கும் வல்லூரில் வாழும்
உரிமையுடையோன்; கவிஞர் போற்றும் சீர்திகழும் கருணீகர் குலத்து உதித்த
தேவராசேந்திரன் - புலவர் கொண்டாடும் மேன்மையாற் பொலியும் கருணீகர் குலத்தில்
தோன்றிய தேவராசேந்திரன் ஆகிய புலவர் பெருமான்; பார் புகழும் குசேலமுனி
சரிதம் அதை தமிழ் பாவின் பகர்ந்தான் - உலகத்தாரால் புகழப்படுகிற குசேல முனிவரின்
வரலாற்றை இனிய தமிழ்ப்பாடல்களால் கூறினான்.

   (வி - ம.்) இஃது ஒரு புலவர் பாடிய சிறப்புப் பாயிரக்கவி என்று தெரிகிறது.
தேவராசன் என்ற இந்நூல் ஆசிரியன் சைவ சமயத்தன் என்பது இக்கவியால் விளங்குகிறது.
எப்போதும் மறவாது சிவனை நினைந்து சிவத் தொண்டு புரிந்து வாழ்பவன் என்ற
கருத்து விளங்கச் சிவபிரான் பதயுகளம் நிலவு நெஞ்சன் என்றார். தூய நீர் எனவே
கங்கையை யுணர்த்தியது. யுகளம் - இரண்டு; இஃது வடமொழி. (24)

                    எழுசீரடி ஆசிரிய விருத்தம்
     சந்தத முற்ற விருந்தினை யோம்புந்
          தக்கவேங் கடகிருட் டினப்பேர்க்
     கந்தவேள் பின்வந் துதித்தவன் திருவூர்க்
          காவலன் முட்பொதி பசுந்தாள்