பக்கம் எண் :

30 குசேலோபாக்கியானம்

            கலிநிலைத்துறை
வாவி மல்கிய வனசமா மலர்பொழி தேனுங்
காவில் மல்கிய கரிசறு மலர்கொழி மதுவும்
பூவில் மல்கிய நதியெனப் புரண்டுமால் என்னத்
தாவி வானளாஞ் சாற்றரு நெல்வயல் வளர்க்கும்.

   (சொ - ள்) வாவி மல்கிய மாவனசம் மலர் பொழி தேனும் - தடாகங்களில்
நிறைந்த பெருமையுள்ள தாமரை மலர்கள் பொழிகின்ற தேனும்; காவின் மல்கிய கரிசு
அறு மலர்கொழி மதுவும் - சோலைகளில் நிறைந்துள்ள குற்றமற்ற பூக்கள் உகுத்த
தேனும்; பூவின் மல்கிய நதிஎன புரண்டு - பூமியில் நிரம்பிய ஆறுபோலக் கரைபுரண்டு;
மால் என்ன தாவி வானளாம் சாற்றரு நெல்வயல் வளர்க்கும் - திருமால்போல நீண்டு
விண்ணினை அளாவுகின்ற சொல்லுதற்கரிய நெல்வயல்களை வளரச்செய்யும். (எ-று)

   (வி - ம்.) பொய்கையில் நிறைந்த தாமரைப் பூக்களில் வடியும் தேனும்,
பூஞ்சோலையில் நிறைந்த பூக்களில் வழியும் தேனும் ஆறாகப் பெருகிஓடும் என்றும்
அத் தேன் பாய்வதால் செந்நெல் வானளாவ வளரும் என்றும் நகர்ச்சிறப்புக் கூறினர்.
நீர்வளம் நிறைந்தது அந்நகர் என்பது கருத்து. (6)

     அறுசீரடி யாசிரிய விருத்தம்
          செம்பொனால் வெண்பொ னால்வில்
     செறிபல மணிக ளாற்செய்
          தம்பொன்மா நகரத் துள்ளார்
     அமைத்தனர் வேண்டா ரற்றால்
          நம்புநாம் புறத்தே நிற்றல்
     நன்றெனக் கொண்டாற் போலும்
          பம்புவார் கதலி கந்தி
     பைங்கழை பொலியுங் காட்சி.

   (சொ - ள்.) பம்புவார் கதலி கந்தி பை கழை பொலியும் காட்சி - நெருங்கிய
நீண்ட வாழை கமுகு பசுமையான கரும்பு (ஆகிய இவைகள்) விளங்குகின்ற
தோற்றமானது; செம்பொன்னால் வெண்பொன்னால் வில் செறி பல மணிகளால் செய்து
அம் பொன் மாநகரத்து உள்ளார் அமைத்தனர்-செம்பொன்னினாலும் வெள்ளியினாலும்
ஒளிமிக்க பலவகை மணிகளாலும் இயற்றி அழகிய பொன்மயமான பெரிய நகரத்தில்
உள்ளார் (அழகாக)