|
அமைத்துக்கொண்டனர்; அற்றால் வேண்டார்-அதனால்
(நம்மை) விரும்பமாட்டார்கள்;
நம்புநாம் புறத்தே நிற்றல் நன்று என கொண்டால் போலும் - விரும்புகின்ற நாம்
நகரின் புறத்தில் (ஒதுங்கி) நிற்பது நலம் ஆகும் என்று கருதியதை ஒக்கும். (எ-று)
(வி - ம்.) நகரின்புறத்தே வாழை, கமுகு, கரும்பு இவைகள் சூழந்து வளர்ந்து
நிற்குந் தோற்றமானது இந் நகரிலுள்ளவர் யாவரும் தங்கம் வெள்ளி பலவகை மணிகள்
இவற்றால் நம் வடிவங்களை மாளிகைகள்தோறும் இயற்றி வைத்தனர். இனி நம்மை
விரும்பமாட்டார் என்று வெளியேறி வந்தது போலத் தோன்றுகின்றது எனக் கற்பித்தார்.
இது தற்குறிப்பேற்றவணி. அந் நகரத்தார் செல்வத்திற் சிறந்தவர் ஆதலால் பொன்னாலும்
வெள்ளியாலும் வாழை, கமுகு, கரும்பு இவற்றின் உருவம் அமைத்து வாயிலில்
நிறுத்தியிருக்கின்றனர் என்பது குறிப்பு. (7)
நெய்க்கருங் கூந்தன் மின்னார்
நீர்குடைந்
தகற்று நானம்
மெய்க்கவின் மறைத்த சாந்தம்
விண்ணுலா நதியும்
நாறச்
செய்க்கருங் குவளை மேய்ந்த
திண்மருப் பெருமை
பாய
வைக்கழுக் கடையே போன்மேல்
வாளைபாய் வாவி
மல்கும்.
(சொ - ள்.) நெய் கருகூந்தல் மின்னார் நீர்குடைந்து-நெய் பூசப்பெற்ற கரிய
கூந்தலையுடைய மாதர்கள் நீரில் மூழ்கி; அகற்றும் நானம் மெய்கவின் மறைத்த சாந்தம்
- (கழுவி) நீக்குகின்ற கத்தூரியும் உடம்பின் அழகை மறைத்திருந்த சந்தனமும்; விண்உலாம்
நதியும் நாற - தேவருலகில் உள்ள ஆகாய கங்கை என்னும் ஆற்று நீரினும்
மணமுண்டாகும்படி ; செய் கருங்குவளை மேய்ந்த திண்மருப்பு எருமை பாய -
வயல்களிலுள்ள கருங்குவளை மலர்களை மேய்ந்த வலிய கொம்புகளை உடைய
எருமைகள் பாய்தலால் ; வை கழு கடையே போல் வாளைமேல் பாய் வாவி மல்கும்-
கூர்மையான ஈட்டிபோலும் வாளைமீன்கள் மேலெழுந்து பாய்தற் கிடமான தடாகங்கள்
நிறைந்திருக்கும், (எ-று)
(வி - ம்.) எருமைகள் குவளைமலர் மேய்ந்து தடாகங்களில் உழக்குவதால்
அங்குள்ள வாளைமீன்கள் மேலெழுந்து பாயும் என்றும், அம் மீன்கள் மங்கையர்
பூசிய கத்தூரி சாந்த மணங் கலந்த நீரினின்று வான்கங்கையிற் பாய்வதால் அக்
கங்கையிலும்
|