|
(சொ - ள்) சோலை
- அந் நகரத்தில் உள்ள சோலைகளானவை; மேதினி
முளைத்த ஆற்றல்-நிலவுலகத்தில் தோன்றியுள்ள தன்மையால்; விண்ணவர் தெறுபாக்கு
உற்று - விண்ணுலகத்தவரை வெல்லும்பொருட்டு மேலோங்கி வளர்ந்து; ஆங்கு ஒது
வில்பத்திரம் கொண்டு உறுதளிரால் சிவந்து - அவ்விடத்தில் சொல்லப்பட்ட
ஒளியையுடைய இலையைக் கொண்டு தளிர்கள் சிவக்கப்பெற்று; தாது இவர் தண்பூ
கற்ப தருகுலம் விதிர் விதிர்ப்ப - மகரந்தம் பொருந்திய குளிர்ந்த மலர்களையுடைய
கற்பகச் சோலை நடுநடுங்கும்படி; தீதுஅறு சுவர்க்கம் நாட்டை தினமும் சென்று உரிஞ்சும்-
குற்றமற்ற தேவருலகத்தை நாள்தோறும் சென்று உரிஞ்சும்.
(வி - ம்.) அந் நகரிலுள்ள பொழில்கள் உயர்ந்து வானைத் தொட்டு
நிற்கின்றன.
அங்குள்ள கற்பகதருவை நடுங்கச் செய்கின்றன. அது விண்ணுலகத்தவரை
வெல்வதற்காகச் சென்றது போலத் தோன்றுகிறது. போர்க்குச் செல்பவர் வில் பத்திரம்
கொண்டுசெல்வர். கோபத்தாற் சிவந்து இருக்கும் அவர் கண்கள். சோலையும் வில்பத்திரம்
கொண்டு சென்றது: தளிராற் சிவந்து நின்றது என்றார். வில்பத்திரம் - வில்லும் அம்பும்
அல்லது வில்லும் வாளும் என்று பொருள் கொள்ளலாம். சோலைக்கு வில் பத்திரம் -
ஒளியையுடைய இலையெனக் கொள்க. சோலை போர் செய்வார்போல் நாளும்
விண்ணுலகத்தைத் தேய்த்துக் கொண்டு நின்றது என்றார். சோலையின் உயர்வு
சொல்லியபடி. (10)
பொங்குபல் லவப்பூஞ் சோலை
புதுமதுக் கனிகள்
காய்கள்
தெங்கிள நீர்கள் மற்றுந்
தேவரும் அரம்பை
மாரும்
அங்கிருந் தயில நாளும்
அளித்திடும்
நல்லூழ் உற்றோர்
எங்கிருப் பினுந்தாம் வேட்ட
யாவையுந் துய்ப்ப
ரன்றே
(சொ - ள்.) பொங்கு பல்லவம் பூ சோலை - மேலெழுந்த தளிர்களையுடைய
பூஞ்சோலைகள்; புது மது கனிகள் காய்கள் தெங்கு இளநீர்கள் மற்றும் - புதிய
தேனையும் பழங்களையும் காய்களையும் தெங்கிள நீர்களையும் வேறுள்ள பல
பொருள்களையும்; தேவரும் அரம்பைமாரும் அங்கிருந்து அயில நாளும்
அளித்திடும் - விண்ணவரும் அரமகளிரும் அவ்விண்ணுலகத்திருந்தபடியே
உண்ணும் படியாக நாள்தோறும் தந்து நிற்கும்; (ஆதலால்) நல்ஊழ் உற்
|