|
கலிவிருத்தம்
மஞ்சினம் எனமட மாதர் ஓதிகண்
டஞ்சிறை மயிலகங் களிகொண் டாடுவ
விஞ்சிருள் பூம்பொழில் மேவு கோகிலம்
அஞ்சிவாய் திறந்திடா தழுங்கிச் சாம்புமால்.
(சொ - ள்.) மடம் மாதர் ஓதி கண்டு மஞ்சு இனம் என அம் சிறை
மயில் அகம்
களி கொண்டு ஆடுவ - மடப்பத்தையுடைய மங்கையர்களின் கூந்தலைப் பார்த்து
மேகக் கூட்டமா மெனவெண்ணி அழகிய மயில்கள் மனக்களிப்பை யுடையவாய்
ஆடுவன, இருள் விஞ்சு பூ பொழில்மேவு கோகிலம் அஞ்சிவாய் திறந்திடாது அழுங்கி
சாம்பும் - செறிவால் இருள் மிக்கு விளங்கும் மலர்ச்சோலைகளில் உறையுங் குயில்கள்
அச்சங் கொண்டனவாய்த் தம் வாய் திறவாது வருந்தி யொடுங்கும்.
(வி - ம்.) கார்காலம் கண்டால் மயில் தோகையை விரித்தாடிக்
களிப்பதும் குயில்
ஓசையடங்கி யுவகையின்றி யடங்கு தலும் இயற்கையாதலின் மங்கையர் கூந்தலை
மேகமென்று நோக்கியாடினமயில் என்றும், குயில் ஒலியடங்கி வாடின என்றும் கூறினர்.
மங்கையர் கூந்தற் சிறப்பு இதனாற் கூறப்பட்டது. ஆடுவ ; பலவின்பால் எதிர்கால
வினைமுற்று. சாம்பும் ; செய்யும் என்னும் வாய்பாட்டு முற்று. (13)
ஏவுலாம் இருவிழி இபத்தின் மென்னடைப்
பூவலர் கருங்குழற் பொன்ன னார்பயில்
பாவுளர் வண்டினம் பருகத் தேன்பொழி
காவுசூழ் வனப்பினைக் கணிக்கல் ஆகுமோ.
(சொ - ள்.) ஏ உலாம் இருவிழி இபத்தின் மெல் நடை பூ அலர்
கருங்குழல்
பொன் அனார் பயில்-கணைகளைப் போல் பிறழும் இரு கண்களையும் பிடியானை
போலும் இள நடையினையும் பூக்களைச் சூடிய கூந்தலையும் உடைய திருமகளை
யொத்த மகளிர் இயங்கிக் கொண்டிருக்கும் இடமாகிய ; பாஉளர் வண்டு இனம் பருக
தேன் பொழி காவு - பண்ணிசை முரலும் சுரும்பினம் உண்ணும்படி தேனினைச்
சொரியும் பூஞ்சோலைகள் : சூழ் வனப்பினை கணிக்கல் ஆகுமோ - ஒழுங்குபட
வளைந்துள்ள அழகினை இனைத்தென அளவிட்டுரைத்தல் கூடுமோ முடியாது.
(வி - ம்.) ஏ - அம்பு. அம்புபோல ஆடவர்மேற் பாய உலாவுதலால்
ஏ உலாம்
இருவிழி என்றார். மங்கையர் நடைக்குப் பெண்யானையின் நடை உவமானமாதலால்
இபம் என்ற பெயர்க்
|