|
(சொ - ள்.) மாதர்களின்
வருந்தாமே போதம்உற புரிந்திடுவீர் சீதமலர் திருமார்பன்
கோது அறுசீர் குறிப்பீர் - மாதர்களால் வருந்தாமல் ஞானத்தை அடைதற்கு
விரும்புவோரே! குளிர்ந்த தாமரை மலரில் வாழ்கின்ற திருமகளை மார்பின்கண் வைத்துள்ள
திருமாலின் புகழை நினைமின் ; மங்கையரின் வருந்தாமேபொங்கம் உற புரிந்திடுவீர்
செங்கமலம் திருமார்பன் கொங்கு அலர் சீர்குறிப்பீர் - மங்கையர்களால் வருந்தாமல்
பொலிவினை அடைதற்கு விரும்புவோரே, செந்தாமரை மலரில் வாழ்கின்ற திருமகளை
மார்பிடத்து வைத்துள்ள திருமாலின் தேன்போலும் இனிமையுடைய பரந்த புகழை
நினைமின் ; வனிதையரின் வருந்தாமே புனிதம்உற புரிந்திடுவீர் கனிமொழி செந்திருமார்பன்
இனிய சீர் குறிப்பீர் - வனிதையர்களால் வருந்தாமல் தூயநிலையை அடைதற்கு
விரும்புவீரே ; கனியின் சாறுபோலுமினிய மொழியையுடைய செந்திருவினை மார்பிடத்து
வைத்துள்ள திருமாலின் இனியதாகிய புகழை நினைமின்.
(வி - ம்.) புரிந்திடுவீர் - விரும்புவீர். இவ்வினையாலணையும்
பெயர் விளியாய்
நின்றது. விரும்புவோர்களே ! நீங்கள் திருமார்பன் சீர் குறிப்பீர் எனக் கூட்டுக.
குறித்தால்
நீவிர் விரும்பியபடி மாதரால் வருந்தாது மெய்ஞ்ஞானமடைவீர் என்பது குறிப்பு.
வேண்டுவார் வேண்டும் பதந்தருவான் திருமால் என உயர்வு கூறியது இது.
(540)
ஒப்புமைபற்றிவந்த
ஆறடித்தரவு
கொச்சகக்கலிப்பா
வண்டாடு பூந்துளப மாலையனை வானோர்கள்
கொண்டாடுஞ் சீர்த்தியனைக் கோவலர்பா டித்தயிர்நெய்
உண்டாடு சீதரனை ஒப்பிலா அற்புதனைக்
கண்டாடும் அன்பருளங் காதலிக்கும் புண்ணியனைத்
தொண்டாள்து வன்றியெனச் சொல்லித் துதிமுழக்கி
ஒண்டாள் துணைக்கொண் டுயர்வீ ருலகீரே.
(சொ - ள்.) வண்டு ஆடு பூ துளப மாலையனை - வண்டுகள் (மொய்த்து)
விளையாடலைச்செய்யும் பொலிவாகிய துழாய்மாலையை அணிந்தவனை ;
வானோர்கள் கொண்டாடும் சீர்த்தியனை - தேவர்களுங்கொண்டாடுதற்குரிய மிகு
புகழையுடையவனை ; கோவலர் பாடி தயிர் செய் உண்டு ஆடு சீதரனை - ஆயர்பாடியில்
தயிரையும் நெய்யையும் (களவு செய்து) உண்டு (ஆய் மகிழும்படி) ஆடல் செய்த
சீதரனை ; ஒப்புஇலா அற்புதனை - (தனக்கு) உவமையில்
|