பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்377


லாத வியத்தகு தன்மையுடையவனை:் கண்டு ஆடும் அன்பர் உளக் காதலிக்கும்
புண்ணியனை - (தன் தெய்வத் தன்மையை) உளம் கண்ணிற் (கண்டு தம்மை மறந்துபாடி)
ஆடும் அன்புடையார் மனத்தை விரும்பி உறைவிடமாகக் கொள்ளும் புண்ணியத்தின்
வடிவாயுள்ளவனே ; தொண்டு ஆள் துவன்றி என சொல்லி துதி முழக்கி ஒள் தாள்
துணைகொண்டு உயர்வீர் உலகீரே-தொண்டாக (அடியேனை) கிட்டிவந்து
ஆட்கொண்டருள்வாய் என்று கூறித் துதித்து ஒளியுள்ள திருவடிகளைக் துணையாகக்
கொண்டு உலகியலிலுள்ளீர் மேனிலை காண்மின்.

   (வி - ம்.) தொண்டு+ஆள்+துவன்றி=தொண்டாடுவன்றி. துவன்றி தொண்டு ஆள்
எனச் சொல்லி என்று கூட்டுக. புண்ணியனை நெருங்கி எம்மைத் தொண்டாகக் கொண்டு
ஆள்வாய் எனக் கூறிப் பின் துதித்துத் தாளைத் துணையாகப் பிடித்து உயர்வடையுங்கள்
என்பது கருத்து. கடவுள் துணையின்றி உயர்வடைவது இயலாது என்பது குறிப்பு.   (541)

          அறுசீரடி ஆசிரிய விருத்தம்
     மின்திகழ் பிறழ்பற் கூற்றம்
          விலாப்புடை வீங்க் உண்ண
     வென்றிகொள் செறுநர்ச் சாய்த்து
          விருந்திடும் வெள்வேல் வேந்தே
     ஒன்றிய புகழ்க்கு சேலன்
          ஊர்ப்புறஞ் சார்ந்த காலை
     நன்றிமிக் குறுமச் சீறூர்
          நலப்பெரு நகரா யிற்றே.

   (சொ - ள்.) மின் திகழ் பிறழ்பல் கூற்றம் விலாபுடை வீங்க உண்ண வென்றி
கொள் செறுநர் சாய்த்து விருந்து இடும் வெள்வேல் வேந்தே-மின்னலைப் போல்
விளங்குகின்ற பற்களையுடைய எமனாவனன் விலாப்புடை பருத்திடவுண்ணும்படி
வெற்றியைப் பொருந்திய பகைவரைக் கொன்று (அவ்வியமனுக்கு) விருந்து ; ஒன்றியபுகழ்
குசேலன் ஊர்புறம் சார்ந்தகாலை நன்றிமிக்கு உறும் அச்சீறூர் நலம்பெரு நகர் ஆயிற்று
- பொருந்திய புகழையுடைய குசேலமுனிவன் தன தூரின் புறத்து வந்துற்ற போழ்து
நன்மை மிகுதியாகப் பொருந்திய அந்தச் சிற்றூரானது நலம் மிக்குயர்ந்து பெரிய
பட்டணமாகி விட்டது.