|
(வி - ம்.) வேந்தே
! என்ற விளி சுகமுனிவர் பரீட்சித்து மன்னனை முன்னிலையாக்கி
அழைத்ததாம். குசேலன் ஊர்ப்புறஞ் சேர்ந்த போதே அவன் வாழ்ந்த சிற்றூர் பெரு
நகரமாய் விளங்கியது என்று சுகமுனிவர் அம்மன்னனுக்குக் கூறிப்பின் வரலாறு
கூறுகின்றார். விருந்துண்ணுவார் விலாப்புடைக்க உண்பார் நல்லுணவாயின். வீரர்களை
வேலாற் பிளந்து கூற்றுக்கு விருந்திட்டது நல்லுணவு. ஆதலாற் கூற்றும் விலாப்புடைக்க
உண்டனன் என்பது கருத்து. வென்றிகொள் செறுநர் என்று பகைவரைச் சிறப்பித்தது
வேந்துக்கு உயர்வைத் தந்தது. (542)
மற்படு
கான மெல்லாம்
மாடமா
ளிகையே யாகிச்
சொற்படு
புலவ ரானுஞ்
சொலற்கருஞ்
சிறப்பு வாய்ந்து
விற்படும்
அமரர் நாடு
வீழ்ந்துமண்
இறைகொண் டாற்போல்
அற்படுத்
தொளி்ர்ந்த தையன்
அருளினிற்
சிறந்த துண்டோ.
(சொ - ள்.) மல்படு கானமெல்லாம் மாடமாளிகையே ஆகி - வளம்
பொருந்திய
நாடுகளல்லாம் மாடங்களமைந்த மாளிகைகளே யாகி ; சொல்படு புலவரானும் சொலற்கு
அரு சிறப்பு வாய்ந்து - புகழ்பொருந்திய புலவர்களாலும் சொல்லுதற்கரிய சிறப்பைப்
பெற்று ; வில்படும் அமரர் நாடு வீழ்ந்து மண்இறை கொண்டால் போல் - ஒளி
பொருந்திய தேவருலகமானது கீழ் விழுந்து நிலவுலகிற் றங்கினாற் போல ; அல்
படுத்து ஒளிர்ந்தது ஐயன் அருளினில் சிறந்தது உண்டோ - இருளையழித்து விளங்கியது
(ஆதலால்) இறைவனாகிய கண்ணபிரானது அருளினானும் மேன்மையானது
வேறொன்றுண்டோ.
(வி - ம்.) காட்டக முழுவதும் மாடமாளிகையமைந்திருந்தன. பொன்னுலகம்
வந்து மண்ணுலகத்துத் தங்கியதுபோல விளங்கியது. கண்ணன் திருவருள் காடு
முழுவதும் மாடமாளிகைகள் தோன்றுமாறு செய்தது. காட்டகம் முழுவதும்
மாடமாளிகையுண்டாகிப் பெரிய நகரமாகத் திகழ்ந்தது என்ற சிறப்புப் பொருளை
ஐயன் அருளினிற் சிறந்ததுண்டோ என்ற பொதுப் பொருளால் முடித்தார். ஆதலால்
வேற்றுப் பொருள் வைப்பணி இது. (543)
|