|
இமைக்குமந்
நகரங் காணூஉ
எறுழ்வலிக்
காதி மைந்தன்
சமைத்தவேற்
றுச்சி ருட்டி
தனில்தயித்
தியரைச் சாயக்
குமைத்தரும்
போகந் துய்த்துக்
குலவுநந்
நகர்க்கு மாறா
அமைத்தபொன்
னகரோ என்ன
அமரருள்
மயங்கி னாரே.
(சொ - ள்.) இமைக்கும் அந்நகரங் காணூஉ எறுழ்வலி காதிமைந்தன்
சமைத்த
வேற்று சிருட்டிதனில் தயித்தியரை சாய குழைத்து அருபோகம் துய்த்து குலவு நம்
நகர்க்கு மாறுஆ அமைத்த பொன் நகரோ என்ன அமரர் உள் மயங்கினார் -
விட்டொளி வீசித்திகழும் அந்த நகரத்தைத் தேவர்கள் கண்டு மிகுந்த தவ வலியையுடைய
காதியின் புதல்வனாகிய விசுவாமித்திர முனிவன் படைத்தற்றொழிலால் வேறாக
உண்டாக்கியதைப் போல அசுரரை அழிய கொன்று அரிய போகங்களை நுகர்ந்து
விளங்குகின்ற நமது நகரத்திற்கு எதிராக (வேறொருவகையால்) படைக்கப்பட்ட
பொன்னுலகமோவென்று மனத்திடை மயக்கமுற்றார்கள்.
( வி - ம்.) தேவர்கள் இந்நகரத்தைக் கண்டு நமது நகர்க்கு மாறுபாடாக
வேறொருவர்
படைத்ததோ என்று ஐயுற்றனர் மயங்கினர். அவ்வளவு சிறப்பமைந்திருந்தது அது. காதி
மைந்தன் - கோசிகன், விசுவாமித்திரன் சிருட்டிதனின் என்பதில், இன் : ஒப்புப்
பொருள்
காட்டியது. படைப்புப் போல என்பது பொருள். (544)
அறன்கடை நயக்கும்
வெஞ்சூர்
ஆருயிர்
சவட்டி வாங்சித்
திறன்படு சுரர்கால்
யாப்புச்
செறிகழல்
வித்துச் சீர்த்தி
நிறங்கிளர்
வெள்வே லையன்
நிறைகுடி
யேற்றும் நாளில்
பிறங்கிய துறக்க
நாட்டின்
பெற்றியந்
நகரின் பெற்றி.
(சொ - ள்.) அறன் கடை நயக்கும் வெஞ் சூர் ஆர் உயிர் சவட்டி
வாங்கி
திறன்படு சுரர் கால்யாப்பு செறி கழல் வித்து
|