|
பது கருத்து. அதனினும் பெரியது இது என்பது.
இருநிதி - சங்கநிதி, பதுமநிதி என்பன.
தாமரைப்பூப் போன்ற வடிவமுடைய சரக்கறை ஒன்று ; சங்கு போன்ற வடிவமுடைய
சரக்கறை மற்றொன்று ; இவ்விரண்டும் வேண்டுவார்க்கு வேண்டும் பொருளீயும்
சிறப்புடையன என்று கூறும் புலவருலகம். (546)
நயந்தரு நடுவுள்
ளானை
நல்லறஞ்
சூழ்ந்தாற் போலப்
பயங்கெழு நகரஞ்
சூழ்ந்து
பாசநீத்
தறிவின் மேலாய்
உயர்ந்தவர்க்
கினிது செய்த
உதவிபோ
லுயர்ந்து மிக்க
வயங்கொளப்
பொலிந்தன் றெஞ்சா
மஞ்சுசூழ்
இஞ்சி மாதோ.
(சொ - ள்.) எஞ்சா மஞ்சு சூழ் இஞ்சி - என்றுங் குறைபாடின்றி
மேகங்கள்
தவழ்ந்து கொண்டிருக்கின்ற (அந்நகரத்து) மதிலானது ; நயம்தரு நடு உள்ளானை நல்
அறம் சூழ்ந்தால் போல - நன்மையைத் தருகின்ற நடுவு நிலைமையுடையானை நல்ல
மற்றையறங்கள் எல்லாம் புறஞ்சூழ்ந்து நிற்குமாறு போல ; பயம்கெழு நகரம் சூழ்ந்து
- பயன்கள் (அறம் பொருள் இன்பம் வீடு) நான்கும் எஞ்சாது நிறைந்துள்ள நகரைச்
சூழ்ந்து ; பாசம் நீத்து அறிவின் மேலாய் உயர்ந்தவர்க்கு இனிது செய்த உதவி போல்
உயர்ந்து மிக்கவயம் கொள பொலிந்தன்று - (ஆசையாகிய) கட்டினை நீக்கி ஞானத்தினால்
மேன்மையடைந்துள்ள சான்றோர்க்கு இனிதாகச் செய்த உதவிப் பயன் போலுயர்ந்து
மிகுவெற்றி கொள்ளுமாறு விளங்கிற்று.
(வி - ம்.) நடு நிலைமையுடையவனை அறஞ்சூழ்ந்ததுபோல நகரத்தை
மதில்
சூழ்ந்திருந்தது. சான்றோர்க்குச் செய்தவுதவி போல அம்மதில் உயர்ந்தது என்பது. பயன்
கெழுநகரம் என்றது மக்கள் எய்தும் பயன்களாகிய அறம் பொருள் இன்பம் வீடு என்ற
நான்கும் அடைவதற்குத் தக்க நகரம் என்பதை விளக்கியது.
(547)
கொன்பெறும் அமிர்தங் கொள்ளை
கொண்டுளார்
நகரை மோதென்
றின்புறு கீர வாழி
இனியநீர்க்
கடலை யேவ
|