பக்கம் எண் :

382 குசேலோபாக்கியானம்

     வன்புறும் அதுவி தேவா
          னவர்நக ரென்னச் சூழ்ந்து
     மன்பெறப் பொருதல் போன்ற
          தகழிநீர் மதிலை மோதல்.

   (சொ - ள்.) அகழிநீர் மதிலை மோதல் - (அந்நகரைச் சூழ்ந்துள்ள) அகழியின்
நீரானது மதிலைத் தாக்குதலை (நோக்குமிடத்து) கொன்பெறும் அமிர்தம் கொண்டு
உளார்நகரை மோது என்று இன்புஉற கீரம் ஆழி இனிய நீர் கடலை ஏவ - பெருமை
பெற்ற அமிர்தத்தைக் கடைந்து கொண்டுள்ளாராகிய தேவர்களின் நகராகிய
பொன்னுலகத்தைத் தாக்கியழித்திடுகவென்று இனிய சுவையுள்ள பாற் கடலானது நன்னீர்க்
கடலினை ஏவிற்றாக ; வன்பு உறும் அது இதே வானவர் நகர் என்ன சூழ்ந்து மன்பெற
பொருதல் போன்றது - வலிமையுள்ள அந்த நன்னீர்க் கடலானது இதுவே
தேவருலகமாமென்றுன்னி வளைந்துகொண்டு மிகுதியாக மோதுதலை யொத்துள்ளது.

   (வி - ம்.) அகழிநீர் மதிலை மோதுந்தோற்றம் திருப்பாற் கடல் தன் பால் இருந்த
அமுதத்தைத் தேவர் எடுத்துச்சென்றனர். அவர் நகரையழித்துவா என்று கருங்கடலையேவ
அது இதுதான் பொன்னகர் என்று கருதி அக்கடல் வந்து மோதுவது போல இருந்தது
என்பது. இதனால் அகழி கருங்கடல் போல இருந்தது என்பது விளங்கிற்று. கீரம்-பால்;
ஆழி-கடல்; பாற்கடல்.
                                                             (548)

     பற்பல அடுக்கு மாடம்
          பரந்தவிண் தாங்கல் நோக்கி
     அற்புறு நந்தம் பொன்னா
          டந்தர நிற்ற லாலே
     விற்பட நிலத்தெவ் வேலை
          வீழுமோ என்றுட் கொண்ட
     கற்பக மாலைத் தேவர்
          காதரம் ஒழிந்த தன்றே.

   (சொ - ள்.) பல் பல அடுக்கு மாடம் பரந்த விண் தாங்கல் நோக்கி -
(அந்நகர்க்கணுள்ள) பற்பல அடுக்குக்களையுடைய மாளிகைகள் பரவி விண்ணுலகத்தை
(உயர்ந்து நின்று) தாங்கு தலைப் பார்த்து, அற்பு உறும் நம் தம் பொன் நாடு அந்தரம்
நிற்றலால் வில் பட நிலத்து எவ்வேலை வீழுமோ என்று உள் கொண்ட கற்பகம்
மாலை தேவர் காதரம் ஒழிந்தது-விருப்பமிகுந்த நமது