பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்383


பொன்னுலகம் பர வெளியில் நிற்கையினால் ஒளியுடனும் சேர நிலவுலகத்தின்கண்
எப்பொழுது விழுமோ என்று மனத் திடை நினைத்திருந்த கற்பக மலர்
மாலையையணிந்துள்ள தேவர்களின் அச்சம் நீங்கிவிட்டது.

   (வி - ம்.) குசேலன் நகரத்து மாளிகைகள் ஒவ்வொன்றும் உயர்ந்து தேவருலகத்தைத்
தாங்கி நின்றன. அதனைக் கண்ட தேவர்கள் "தம்முலகம் அந்தரமாக நிற்கின்றது
எப்போது விழுமோ" என்று முன் நினைத்திருந்த அச்சம் சிறிதுமின்றி நீ்ங்கிற்று என்பது.
பற்பல அடுக்கு மாடம் ; ஏழினும் மிக்கு அடுக்கிய பலபல அடுக்கினையுடைய மாடங்கள்
என்பதை விளக்கியது. காதரம்-அச்சம்.
                                                               (549)

     பற்றையார்ந் துயர்ந்த ஓங்கற்
          பரிசன்ன பைம்பொன் மாடத்
     தெற்றையான் புனைவல் வானாற்
          றிருபுறம் நெருங்கி நிற்குங்
     கற்றையார்ந் தெழுந்த மாடங்
          கவிழ்தர வொட்டா தென்னா
     ஒற்றையா ருருளைத் தேரை
          நடத்துவோன் உவகை பூத்தான்.

   (சொ - ள்.) பற்றை ஆர்ந்து உயர்ந்த ஓங்கல் பரிசு அன்ன பை பொன் மாடத்து
எற்றை யான் புனைவல் - சிறு தூறுகள் அடர்ந்துள்ள உயர்ந்த மலையின் தன்மை
போன்ற பசிய பொன்னினாய மாளிகைகளின் எத்தன்மையான அணியினை யான்
புனைந்து கூறவல்லேன் ; வான் ஆறு இருபுறம் நெருங்கி நிற்கும் கற்றை ஆர்ந்து
எழுந்த மாடம் கவிழ்தர ஒட்டா என்னா ஒற்றை ஆர் உருளை தேரை நடந்துவோன்
உவகை பூத்தான் - ஒற்றை ஆழியை யுடைய தேரை யூர்ந்து செல்வோனாகிய பகலவன்
நாம செல்லும் வான் வழியில் இருமருங்கும் நெருங்கித் திரளாகவமர்ந்துள்ளன (இந்நகரத்து)
மாளிகைகள் (ஆதலால் அவை நந்தேரை) கவிழ்ந்திட வொட்டாவென்று
களிப்புடையனாயினான்.

   (வி - ம்.) வான் ஆறு இருபுறம் என்றது வழியிரு பக்கம் என்று பொருள்படும்.
எனவே சூரியன் நடுவிற் செல்லுகின்றான் என்றும் அவனுக்கு இருமருங்கிலும் உள்ள
வெளி இரு புறமாகும். அவ்விரு புறத்தும் மாளிகைகள் ஓங்கி விண்ணை முட்டி
நிற்பதனால் இனி நம் தேர் கவிழாது என்று மகி்ழ்ச்சி