பக்கம் எண் :

514 குசேலோபாக்கியானம்

ஆகையால் ஐயனே ! இந்தப் பொய்யாகிய செல்வத்தை விரும்பிடேன், மேன்மையுற்
முன்னிருந்த வறுமையே இன்னமும் வேண்டும் ; காதலின் அடியார் வேண்டும் காரியம்
அளித்து காக்கும் நீ தயைபுரிந்து என் உள்ளம் கருத்தினை நிரப்புக என்றான் -
அன்பினையுடைய அடியவர் விரும்புகின்ற காரியங்களை அருளிச் செய்து காக்கின்ற
நீ கருணை செய்து என் மனக்கருத்தை நிறைவேற்றுகவென்றான்.

   (வி -ம்.) அநித்தியம் - அழிவு, கேடு, மேதக - மேன்மையுற. மிடி - வறுமை.
அடியார் வேண்டும் பொருளளிப்பது உன் கடனாம் ஆதலால் எனக்கு வேண்டியது
வறுமை, அதனையே அருள்க என வேண்டினன் குசேலன் என்பது.        (730)

அல்கலி லன்பன் வார்த்தை யனைத்தையுஞ் செவிம டுத்து
மல்குமா மறைகட் கெட்டா மாயவன் முறுவல் பூத்துப்
பல்குநன் பொருள்வேண் டாது பயனின்றிக் கழிந்த தீய
நல்குர வளித்தி யென்ற காரண நவிற்று கென்றான்.

   (சொ - ள்.) அல்கல் இல் அன்பன் வார்த்தை அனைத்தையும் செவிமடுத்து -
சுருங்குதலில்லாத அன்பினையுடைய குசேலனது மொழிகளெல்லாவற்றையும்
திருச்செவியிலேற்றருளி ; மல்கும் மாமறைகட்கு எட்டா மாயவன் முறுவல்பூத்து -
நிறைவுறு மறைகளுக்கும் எட்டவொண்ணாத் திருமால் புன்னகை செய்து பல்கும்
நல்பொருள் வேண்டாது பயன்இன்றி கழிந்த தீய நல்குரவு அளித்தி என்ற காரணம்
நவிற்றுக என்றான் - வளர்ச்சியடைதற்குரிய நல்ல பொருளினை விரும்பாமல், பயனில்லாது
கழிந்த வறுமையைத் தருகவென்று நீ சொன்ன காரணத்தைக் கூறக் கடவை என்றான்.

   (வி - ம்.) அல்கல் - குறைவு, இல் - இல்லாத = குறைவில்லாத. நல்குரவு -
வறுமை. குசேலன் கூறியதைக் கேட்ட திருமால் வறுமையைக் கொடு என்று கேட்பதற்கு
என்ன காரணம் கூறுக என்றான்.                                     (731)

          தெள்ளுகா ரணந்தான் முன்னர்ச்
               செய்தவிண் ணப்பத் தாலே
          வெள்ளிடை விலங்கல் போல
               விளங்குபு கிடந்த தைய