|
உள்ளுதன்
முதல யாவும்
இயல்பினி
னுணரா நிற்கும்
வள்ளல்நீ யறியான்
போல
வினாவுதன்
மாட்சித் தேயா.
(சொ - ள்.) தெள்ளு காரணம் முன்னர் செய்த விண்ணப்பத்தாலே
வெள் இடை
விலங்கல்போல விளங்குபு கிடந்தது - தெளிவாகிய காரணந்தானும், முன்னே அடியேன்
செய்த விண்ணப்பத்தினாலேயே வெள்ளிடை மலைபோல விளங்கிக் கிடந்தது ; ஐய
உள்ளுதல் முதல யாவும் இயல்பினின் உணரா நிற்கும் வள்ளல் நீ அறியான் போல
வினாவுதல் மாட்சித்தேயோ ஐயனே, (பிறர்) நினைத்தல் முதலிய எல்லாவற்றையும்
இயற்கையாகவே அறிகின்ற (முற்றுணர்வினனாகிய) வள்ளலே ! நீ அறியாதவன் போல
வினவுதல் மாட்சிமையுடையதாமோ?
(வி - ம்.) வெள்ளிடை விலங்கல் - வெளியான இடத்தில் உள்ள
மலை. விளங்குபு
- விளங்கி. உள்ளுதல் - நினைத்தல். குசேலன் திருமாலைநோக்கி மாந்தல்
நினைப்பனவெல்லாம் அறியும் ஆற்றலுடைய உனக்குத் தெரியாதா? நான் முன்கூறிய
விண்ணப்பத்தில் வெள்ளிடை மலைபோல விளங்கிக் கிடப்பதால் நான் கூற வேண்டா
என்று கூறினன்.
(732)
செய்யநின் னடித்தி யானஞ் செய்துநாள் கழியா நிற்பேற்
கையவீ திடையூ றாகி யடைந்ததிங் கிதனைப் போற்றிப்
பொய்படு பவஞ்ச வாழ்க்கைப் புலைத்தொழிற் பாரம் பூண்டு
நைபடு முள்ள தேனாய் நாடொறுங் கழிதல் நன்றோ.
(சொ - ள்.) செய்ய நின் அடி தியானம் செய்து நாள் கழியா நிற்பேற்கு
ஐய ஈது
இடையூறு ஆகி அடைந்தது - செவ்வியதாகிய உன் திருவடிகளை (இடைவிடாது)ச்
சிந்தித்து, நாட்களைக் கழிக்கின்ற எனக்கு , ஐயனே இந்தச் செல்வமானது இடையூறாகி
வந்துற்றது ; இங்கு இதனைப் போற்றி பொய்படு பவஞ்சம் வாழ்க்கை புலைத்தொழில்
பாரம் பூண்டு நைபடும் உள்ளத்தேன் ஆய் நாள்தொறும் கழிதல் நன்றோ -
இவ்விடத்திதனைக் காத்து, பொய்யாகிய பிரபஞ்ச வாழ்வாகிய இழிதொழிலின் சுமையினை
மேற்கொண் டொழுகி, நைந்த மனத்தினேனாகிய நாட்களெல்லாம் கழிந்து போதல்
நன்றாமோ?
(வி - ம்.) செல்வம் நின்னடி நினைப்பதற்கு இடையூறாகி நிற்கின்றது.
இச்
செல்வத்தைப் போற்று மாய வாழ்க்கையைத்
|