|
தூய வாழ்க்கையாக்குவது இயலுமோ? இவ்வாழ்வில்
நாட்கள் கழிப்பது நன்றாகுமோ
என்றான். பவஞ்சம் - ப்ரபஞ்சம் என்ற வடசொல்லின் திரிபு. புலை - இழிவு. (733)
எம்பிரான் கருணை செய்க வென்றிரந் தடிவில் வீழ்ந்தான்
வெம்புறேல் கவலை யெல்லாம் விடுதியென் றுடலந் தைவந்
தும்பரார்க் கரிய வின்ப முறுவையென் றுரைக்க லுற்றான்
தும்பிகா லுழக்க மட்டுத் துளித்திடுந் துளபத் தாரான்.
(சொ - ள்.) எம்பிரான் கருணை செய்க என்று இரந்து அடியில் வீழ்ந்தான்
-
எம்பெருமானே திருவருள் புரிகவென்று துதி்த்துத் திருவடிகளில் விழுந்து
வணங்கினான் ; தும்பிகால் உழக்க மட்டு துளித்திடும் துளபம் தாரான் - (அப்பொழுது)
வண்டுகள் கால்களாற் றுவைத்திடலால் தேன்றுளிக்கின்ற துழாய் மாலையை யணிந்த
கண்ணபிரானாகிய திருமால் ; வெம்புறேல் கவலை எல்லாம் விடுதி என்று உடலம்
தைவந்து - வருந்துதல் வேண்டா, துன்பமெல்லாவற்றையும் விட்டு நீங்குக வென்று
(கூறி) உடம்பைத் தடவி ; உம்பார்க்கு அரிய இன்பம் உறுவை என்று உரைக்கல்
உற்றான் - தேவர்களுக்குக் கிடைத்தற்கரிய பேரின்பம் அடைவாயென்று (மேலும்)
கூறுவானாயினன்.
(வி - ம்.) தும்பி - வண்டு. மட்டு - தேன். தைவந்து - தடவி.
உறுவை -
பெறுவாய். குசேலன் திருமாலடியின் வீழ்ந்தான். திருவருள் புரிக என்று வேண்டினன்.
அப்போது நீ இனி வருந்தாதே துன்பத்தை விட்டுப் பேரின்பம் அடைவாயென்று
கூறினன்.
(734)
திருவநன் களித்த
துன்னைச்
சேர்ந்தவர்
நிமித்தங் கண்டாய்
ஒருவுநின் னுளம்போ
லன்னா
ருள்ளமுந்
துறவிற் றேயோ
மருவிநிற் சார்ந்தார்
துன்பின்
வயங்குத
லழகி தாமோ
பொருவிலா முனிவ
ரேறே
யஃதெண்ணிப்
புந்தி மாழ்கேல்.
(சொ - ள்.) திருவம் நன்கு அளித்தது உன்னை சேர்ந்தவர் நிமித்தம்
கண்டபாய்
- செல்வத்தை மிகுதியாக அருளியது, உன்னைச் சார்ந்துள்ள மனைவி மக்கள்
பொருட்டேயாகும் ; ஒருவும் நின் உளம்போல் அன்னார் உள்ளமும் துறவிற்றேயோ -
துறவினைமேற்
|